இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நீர்வள நிலவளத் திட்டத்தில் ஒற்றைச் சாளர தகவல் மையம் :விவசாயிகள் அலைச்சல் தீரும்


விவசாயிகளின் அலைச்சலை தவிர்க்க, மதுரை மாவடம் குடிசேரி கிராமத்தில் நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் ஒற்றைச் சாளர தகவல் மையம் திறக்கப் பட்டுள்ளது.தமிழகத்தில் நீர்வள ஆதார துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை விற்பனை மையத்துறை, வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய எட்டு துறைகள் இணைந்து நீர்வள, நிலவள மேம் பாட்டுத்திட்டம் செயல்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் கிராமப்பகுதியில் உள்ள நீராதாரமையங்களை செப்பனிடுதல், இருக்கும் நீரைக் கொண்டு நவீன முறையில் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் களை மேம்படுத்தும் பணியை செய்து வருகின்றனர். குடிசேரியில் இந்த திட் டத்தின் அடுத்த கட்டமான ஒற்றைச்சாளர தகவல் மையம் துவக்கவிழா நடந் தது. குண்டாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் செல்வராஜ் மையத்தை துவக்கி வைத் தார். உதவி செயற்பொறியாளர் வெங்கட்ராமன், உதவிப்பொறியாளர் சுகுமாறன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், வோளண்மை பொறியியல் துறை பொறியாளர் சிவகுமார், துணை வேளாண்மை அலுவலர் பீமராஜ், மற்றும் பாசன நீர் உபயோகிப்பாளர்கள் சங்க பிரதிநிதிகள் விழாவில் கலந்து கொண்டனர். மையத்தை திறந்து வைத்து செயற்பொறியாளர் செல்வராஜ் கூறியதாவது: எட்டு துறைகளைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் சுழற்சி முறையில் தினசரி இந்த மையத்திற்கு வருவர். அவர்களிடம் விவசாயிகள் நீர்வள, நிலவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் எழும் சந்தேகங்கள், அரசின் மானிய உதவிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டு தெளிவு பெறலாம். பிற துறைகளைச் சேர்ந்த சந்தேகங்களுக்கும் அங்கு வரும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் கேட்டு விவசாயிகளுக்கு தக்க பதில் வழங்குவர்.விவசாயிகளின் அலைச் சலை தவிர்க்க இந்த ஒற்றைச்சாளர மையம் துவக்கப்பட்டுள்ளது. குடிசேரி கிராமத்தில் நீர்வள, நிலவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறையின் சார்பில் குடிசேரி, குப்பம்மாள் சமுத்திரம், சாப்டூர், கடமங்களம் கண்மாய், அலப்பலச்சேரி, சென்னலப்பச்சேரி, பூலாங்குளம் ஆகிய ஏழு கண்மாய்களும், கருவாட்டு அணை, குப்பம்மாள் சமுத்திரம், வண்டப்புலி, சென்னலப்பச்சேரி, அலப்பலச் சேரி ஆகிய ஆறு அணைக் கட்டுகளும் ஒரு கோடியே 87 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதே போல் ஒவ்வொரு துறை சார்பிலும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகள், மானியத்துடன் கூடிய உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த தகவல்களை இந்த மையத்தில் கேட்டுத் தெரிந்து விவசாயிகள் பயனடையவேண்டும் என கூறினார்

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment