இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

'டீசல் என்ஜின்' விவசாயிகளுக்கு ​விடிவு காலம் வருமா?



திருக்கோவிலூர் பகுதியில் மின் இணைப்பு கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் பாசன பயன்பாட்டுக்கு டீசல் என்ஜினையே பயன்படுத்தி வருகின்றனர்.​ ​​ திருக்கோவிலூர்,​​ அரகண்டநல்லூர்,​​ வீரபாண்டி,​​ கண்டாச்சிபுரம்,​​ மணலூர்பேட்டை,​​ சித்தலிங்கமடம்,​​ ரிஷிவந்தியம்,​​ மூங்கில்துறைப்பட்டு,​​ வடபொன்பரப்பி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.​ ​இதில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் நெல்லும்,​​ மீதமுள்ள பகுதிகளில் கரும்பு,​​ நெல்,​​ மணிலா,​​ பருத்தி,​​ கோதுமை,​​ மக்காச்சோளம்,​​ உளுந்து உள்ளிட்ட பல பயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றன.​ ​இப்பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயப் பாசனக் கிணறுகள் உள்ளன.​ அதில் சுமார் 12 ஆயிரம் கிணறுகளில் மட்டுமே மின் மோட்டார் இணைப்பு உள்ளது.​ மற்ற கிணறுகளில் டீசல் என்ஜினையே பாசனத்துக்கு பயன்படுத்தும் நிலை உள்ளது.​ ​தமிழக அரசு கொண்டுவந்த இலவச மின்சாரத்திட்டம் மின் மோட்டார் இணைப்புப் பெற்றுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பயனளிக்கிறது.​ ஏழை விவசாயிகள் டீசல் என்ஜினைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.​ ​மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக டீசல் என்ஜின் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.தற்போது ரூ.50 ஆயிரம் செலுத்தும் விவசாயிகளுக்கு உடனடியாகவும்,​​ ரூ.25 ஆயிரம் செலுத்துவோருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.​ ​இதனால் பெருநிலக்கிழார்கள் மட்டுமே உடனடியாக பணம் செலுத்தி மின் இணைப்பைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.​ சிறு மற்றும் குறு விவசாயிகள் போதிய பண வசதியின்றி மின் இணைப்புப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.​ ​எனவே தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.​ அதுவரையில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதைப்போல் டீசல் என்ஜினை பயன்படுத்தும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் மானிய விலையில் டீசல் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment