இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மீன் வளர்ப்புத் தொழில்: தொழிலதிபர்களுக்கு அழைப்பு




​ ​ ​ லாபகரமான மீன் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.​ ​ ​ ​ இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெ.​ உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ ​ ​ ​ மீன் குஞ்சு உற்பத்தியில் தன்னிறைவு அடைய அரசு கட்டுப்பாட்டிலுள்ள மீன் பண்ணைகளின் தரத்தை உயர்த்தவும்,​​ தனியார் நிறுவனங்களுக்கு மானியம் அளித்தும் மீன் குஞ்சு உற்பத்தியைப் பெருக்க மீன் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.​ ​ ​ அதன்படி,​​ தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 50 சத மானியத்தில் மீன் வளர்ப்பு நிலையம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.​ ​ ​ எனவே,​​ மீன் பண்ணை அமைக்க விரும்பும் நபர்களிடம் 1 ஹெக்டேர் நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.​ குத்தகை நிலமாக இருப்பின் 10 ஆண்டுகளுக்குக் குறையாமல் குத்தகையைப் பதிவு செய்திருக்க வேண்டும்.​ ​ ​ அந்த நிலம்,​​ வெள்ளத்தால் பாதிக்காத வகையிலும்,​​ போதுமான அளவு நீர் வசதி மற்றும் சாலை வசதிகளுடனும்,​​ நீர் வரத்துப் பெற மின் வசதி அல்லது இதர வசதிகளும் பெற்றிருக்க வேண்டும்.​ ​ ​ தொழிலில் ஈடுபட விரும்பும் பயனாளி,​​ மீன்வள மேம்பாட்டு முகமையில் ​ உறுப்பினராகவும்,​​ மீன் குஞ்சு வளர்ப்பில் போதியப் பயிற்சி பெற்றவராகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.​ ​ ​ ​ எனவே,​​ கரூர் மாவட்டத்தில் ஆர்வமுள்ள-​ மீன்வள மேம்பாட்டு முகமையில் தனியார் மீன் வளர்ப்பாளர்கள் உடனடியாக மீன் துறை உதவி இயக்குநர்,​​ ​(உள்நாட்டு மீன் வளம்),​​ எண்.​ 59,​ பைபாஸ் சாலை,​​ மன்னார்புரம்,​​ திருச்சி என்ற முகவரியை அனுகலாம்.மேலும் விவரங்களுக்கு 0431-2421173 என்ற தொலைபேசி எண்

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment