இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மேட்டூர் அணை திறப்பதில் தாமதம் : உளுந்து சாகுபடி பாதிப்பு


இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்தும்,​​ உரிய நேரத்தில் பாசனத்துக்குத் திறக்காததால்,​​ காவிரி டெல்டா மாவட்டங்களில் உளுந்து சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநிலத்துடன் காவிரி நீர்ப் பிரச்னை தொடங்கிய காலம் முதல் தமிழகத்தில் 11 டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி முற்றிலும் நின்று போயிற்று.16 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடியும்,​​ பல ஆண்டுகள் விவசாயிகளுக்கு நம்பிக்கை அற்ற நிலையையே ஏற்படுத்தி இருக்கிறது.காவிரிப் பிரச்னை தொடங்குவதற்கு முன் ஜூன் 12-ல் மேட்டூர் அணைத் திறக்கப்பட்டு வந்தது.​ இதனால் தமிழக டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடைக்குப் பின்னர் வரும் உளுந்து மகசூல் செலவில்லாமல் கிடைக்கும் போனஸôகக் கருதப்பட்டு வந்தது.இந்த ஆண்டு ஜூன்,​​ ஜூலை மாதங்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடிக்கு மேல் இருந்தும் பாசனத்துக்குக் திறக்கப்படவில்லை.காலம் கடந்து திறக்கப்பட்டதன் விளைவாக செப்டம்பர் கடைசி வாரத்தில்தான் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் காவிரி நீர் கிடைத்தது.சம்பா அறுவடைக்கு 10 நாள்களுக்கு முன் ​(ஜனவரி முதல் வாரத்தில்)​ வயலில் உளுந்து விதைத்து விடுவார்கள்.​ வயலில் உள்ள ஈரம் மற்றும் பனியால் வளர்ந்து,​​ பிப்ரவரி கடைசியில் தென்றல் காற்று வீசத் தொடங்கியதும் பூத்துக் காய் பிடிக்கும்.​ ஆனால் இந்த ஆண்டு அறுவடை தொடங்கியே 10 நாள்கள்தான் ஆகிறது.​ கடலூர் மாவட்டத்தில் மானாவாரி,​​ இறவை உள்ளிட்ட சுமார் 1.60 லட்சம் ஏக்கரில் உளுந்து பயிரிடப்பட்டு வந்தது.​ இந்த ஆண்டு உளுந்து விதைப்பு குறைந்து விட்டது.இதனால் பெருவாரியாகப் பயன்படுத்தும் ஏடிடி 9 உளுந்து விதை விவசாயிகளிடம் கையிருப்பு இல்லை.​ எனவே இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் உளுந்து உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.இது குறித்து விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்பாளர் பி.ரவீந்திரன் கூறுகையில்,​​ தமிழகத்தில் இந்த ஆண்டு 9 லட்சம் டன் உளுந்து உள்ளிட்ட பயறுவகைகள் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால் 6 லட்சம் டன் உற்பத்தியாவதே பெரிய விஷயம் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது.​ உளுந்து விதைக்கும் காலம் ஜனவரி கடைசி வாரத்தில் முடிந்து விட்டது.கடலூர் மாவட்டத்தின் உளுந்துவிதை தேவை 110 டன்.​ ஆனால் காலம் கடந்து தற்போது 50 டன் டி.ஐ.​ 9 உளுந்தை தருவித்து இருக்கிறது வேளாண் துறை.இதன் விலை மானியம் போக கிலோ ரூ.​ 90.​ வெளிச் சந்தையில் ரூ.​ 70-க்குக் கிடைக்கிறது.​ காலம் கடந்து விட்டதால்,​​ கிலோ ரூ.​ 90 விலை கொடுத்து வாங்கி விதைக்க,​​ விவசாயிகள் தயக்கம் காட்டுகிறார்கள்.இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்வதால் விதைத்து இருக்கும் உளுந்து பாதிக்கப்படுகிறது.​ இத்தகைய நேரங்களில்,​​ மேட்டூர் அணையில் இருந்து உளுந்துக்கு இரு முறை பாய்ச்சுவதற்குக் தண்ணீர் கொடுத்தால் நலமாக இருக்கும் என்றார்.இது குறித்து கடலூர் வேளாண் இணை இயக்குநர் இளங்கோவனிடம் கேட்டதற்கு தமிழகத்தில் இந்த ஆண்டு 4 லட்சம் டன் உளுந்து உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்து பயிரிடப்பட்டு இருக்கிறது.​ பலர் சம்பா அறுவடைக்குப் பின் உளுந்து விதைத்து இருக்கிறார்கள் என்றர்

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment