நெற்பயிரில் நோய்த் தாக்குதல்: 1000 ஏக்கர் விவசாயம் பாதிப்பு
6:10 PM செய்திகள், நெற்பயிரில் நோய்த் தாக்குதல்: 1000 ஏக்கர் விவசாயம் பாதிப்பு 0 கருத்துரைகள் Admin
ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் நெற்பயிர்களில் நோய்த் தாக்கி சுமார் 1000 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நயினார்கோயில் ஒன்றியம் பொட்டகவயல்,
நெடுந்துளசி, உகமை, திருவாடானை தாலுகா மணக்குடி ஊராட்சி கண்ணரேந்தல் கிஉள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நோய்தாக்கிய நெற்பயிர்களுடன் கூட்டத்துக்கு வந்து ஆட்சியரிடம் புகார் செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:
இந்நோய் தாக்குதல் பற்றி வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. விவசாயிகளை அதிகாரிகள் தொடர்ந்து அலைய விட்டார்களே தவிர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான் தருமாறு கேட்டால் மார்ச் மாதம் தான் தருவோம் என்று தெரிவிக்கின்றனர்.
நெற்பயிர் நோய்த் தாக்குதலால் ஏராளமான கிராமங்களில் விவசாயம் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: செய்திகள், நெற்பயிரில் நோய்த் தாக்குதல்: 1000 ஏக்கர் விவசாயம் பாதிப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது