இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பாசனத்திற்கு தடையாக இருக்கும் அமலைச் செடிகள்

அம்பாசமுத்திரம் பகுதியில் பாசனக் கால்வாய்களில் வளர்ந்துள்ள அமலைச் செடிகள், காட்டாமணக்கு செடிகளால் தண்ணீர் கிடைப்பதில் தடை உள்ளது. எனவே, கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம் அணையின் மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய் மூலம் 24,100 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. இக் கால்வாய்களில் வளர்ந்து காணப்படும் அமலைச் செடிகள், காட்டாமணக்கு செடிகளால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
அம்பாசமுத்திரம் வட்டத்தில் விவசாயம் பிரதானமாக உள்ளது. கால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. கால்வாய்களைச் சீரமைக்க அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் முழு அளவில் கால்வாய்கள் பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பாசனத்திற்கு தண்ணீர் தடையின்றி வழங்கும் வகையில் கால்வாய்களில் சிமெண்ட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதல் கட்டமாக கன்னடியன் கால்வாயில் ரூ. 18 கோடி மதிப்பில் சிமெண்ட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இந் நிலையில் வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய்களில் அதிக அளவில் அமலைச் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், கடைசி மடைக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை என விவசாயிகள் புகார் கூறினர்.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் இக் கால்வாய்களில் வளர்ந்துள்ள அமலைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் மூன்று கால்வாய் நீர்பாசன சங்க தலைவர் இரா. சிவகுருநாதன்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment