இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வீட்டுமனைகளாக மாறி வரும் விளைநிலங்கள்





காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலை பெருக்கம், நலிந்து வரும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன.இம் மாவட்டத்தில் 1.45 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் விவசாயமும், 7,586 ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு விவசாயமும், 28, 766 ஹெக்டேர் பரப்பளவில் மணிலா விவசாயமும் நடைபெற்று வந்தது. இவைத் தவிர பருத்தி மற்றும் தோட்டப் பயிர்களும் பயிர் செய்யப்பட்டு வந்தன.ஆனால், தற்போது தொழிற்சாலைகள் அதிகரிப்பதால் குடியிருப்புகளும் விரிவடைந்து வருகின்றன. இதனால், நன்றாக விவசாயம் நடைபெறும் நிலங்களைகூட அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் விற்றுவிடுகின்றனர். வேளாண் தொழிலில் போதிய லாபம் கிடைக்காததே இதற்கு முதல் காரணம் என்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை, அதிக விலைக்கு விற்கப்படும் உரங்கள், விதைகள் ஆகியவைதான் காரணம் என்கின்றனர் கிராமப்புற விவசாயிகள்.விவசாயிகள் பலர் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு விற்று வருகின்றனர். நிலங்களை வைத்துள்ள மேலும் சிலர் தங்கள் நிலங்களை தரிசாக போட்டு வைத்துள்ளனர்.ஆள் பற்றாக்குறையை சமாளிக்க நவீன தொழில்நுட்ப உத்திகளையும், இயந்திரங்களையும் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் அவர்களை தயார் படுத்த வேண்டும். அவர்களுக்கு விவசாய பொறியியல் துறை மூலம் எளிதில் விவசாயம் சார்ந்த கருவிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கூடுதல் விலை உள்ள கருவிகளை விவசாய கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் கையில் கொடுத்து குறைந்த வாடகையில் விவசாயிகள் இயந்திரங்களை பயன்படுத்தவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் தடுக்க ஏரிகளை தூர்வார வேண்டும். மழை பெய்தால் ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து இயற்கை விவசாயிகள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் தேவராஜன் கூறியது:விவசாயிகள் தங்களுக்கு கூடுதல் விளைப்பொருள்கள் விளையும்போது விலைகள் குறைகின்றன. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுபடியாகக் கூடிய விலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.ஓரகடம் பகுதியில் மூன்றுபோகம் விளையும் விவசாய நிலங்களை அரசே சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற காரணங்களுக்காக எடுத்துள்ளது. நெல் விளையும் நன்செய் நிலங்களை ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்கு மாற்ற அனுமதிக்கக் கூடாது. சொட்டுநீர்ப் பாசனம் போன்றவற்றுக்கு மானியங்கள் வழங்கும்போது அந் நிறுவனத்தால் விற்கப்படும் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.÷இதனால், மானியத்தின் பலன் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. தண்ணீர் சிக்கனத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் பிவிசி பைப்புகள் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கும் தொடர்ந்து மானிய விலையில் குழாய்களை வழங்க வேண்டும் என்றார் அவர்.இது குறித்து மேலும் சில விவசாய ஆர்வலர்களிடம் கேட்டபோது விவசாயிகளுக்கு செம்மை நெல் சாகுபடி போன்ற நவீன விவசாய யுக்தியுடன் பல்வேறு பயிற்சிகளையும் அரசு அளிக்க வேண்டும். விளைப் பொருள்களை பதப்படுத்துவது, சந்தைப்படுத்துவது, விவசாய விளைபொருள்களை உணவுப் பொருள்களாக மாற்றுவது போன்ற தொழில்நுட்ப பயிற்களை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். அதன் மூலம் விவசாயிகள் லாபம் பெற ஏதுவாக இருக்கும். விவசாயத்தில் உரிய லாபம் கிடைத்தாலே விவசாயிகள் தங்கள் விளை நிலத்தை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு விற்கமாட்டார்கள் என்கின்றனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment