இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விளைநிலங்கள் குறைந்ததே உணவுப் பற்றாக்குறைக்கு காரணம்!

சர்வதேச அளவில் விளை நிலங்கள் குறைந்து வருவதே வறட்சி மற்றும் உணவுப் பற்றாக்குறைக்குக் காரணம் என்று உணவு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் இந்த ஆண்டு உருவாகவிருக்கும் வறட்சி பெரும் விளைவுகளை சர்வதேச அளவில் உருவாக்கும் என்றும் இந்த மையம் கூறியுள்ளது.

இந்தியாவில் வழக்கத்தை விட இந்த ஆண்டு 29 சதவிகிதம் குறைவான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துவிட்டதால், 2009 நிதியாண்டை வறட்சி ஆண்டாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

இப்போதே வறட்சி நிவாரணப் பணிகளையும் துவங்கிவிட்டது. இதனால் தேசிய அளவில் கடும் விலை உயர்வு இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு வறட்சியை சமாளிக்கும் அளவுக்கு இந்தியாவிடம் உணவுப் பொருள் கையிருப்பு இருந்தாலும், சர்வதேச அளவில் இந்திய வறட்சி கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச உணவுக் கொள்கை மற்றும் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

பருவமழை பொய்ப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த வறட்சி மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் விவசாய நிலங்கள் குறைந்துவிட்டதுதான் என்றும், மக்கள் தங்கள் விளை நிலங்களை கட்டடங்களாக மாற்றிவிட்டதே வறட்சிக்கான முக்கிய காரணம் என்றம் இந்த மையம் அறிவித்துள்ளது.

கபீர்,தாராபுரதில்லிருந்து

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment