நெல் பயிர்களில் 'லட்சுமி நோய்' : மதுரை குழுவினர் ஆய்வு
7:33 AM செய்திகள், நெல் பயிர்களில் 'லட்சுமி நோய்' : மதுரை குழுவினர் ஆய்வு 0 கருத்துரைகள் Admin
இராமநாதபுரம் மாவட்டத்தில் "லட்சுமி நோய்' தாக்கிய நெற்பயிர்களை மதுரை குழுவினர் ஆய்வு செய்தனர்.
மாவட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகின. பால் கட்டும் பருவத்தில் நெற்கதிர்களில் ஏற்பட்ட இந்த நோயால், விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். "நெற்பழம்' எனப்படும் இந்நோயை லட்சுமி நோய் எனவும் அழைக்கின்றனர். கதிர்களில் காளான் போன்ற தோற்றம் ஏற்படுவதே இந்நோயின் அறிகுறியாகும்.
நோய் குறித்த புகாரை தொடர்ந்து மதுரை வேளாண் கல்லூரியை சேர்ந்த டாக்டர்கள் சீனிவாசன், யேசுராஜ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப் ப்டடது. வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி தலைமையில் சென்ற இக்குழுவினர், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயம் , விதைப்பு முறையில் நடந்துள்ளது. நெருக்கான இப்பயிரிடும் முறையால், பயிர்களுக்கு போதிய காற்று, வெப்பம் கிடைக்காமல் போனது. மாறிய வானிலையின் காரணமாக விளைச்சல் தன்மை மாறி , நோய் தாக்குதலுக்கு ஆளானது தெரியவந்தது. இதை தொடர்ந்து பயிர்களுக்கு காற்று கிடைக்கும் படி இடைவெளி விடுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. போதிய காற்றும், வெயிலும் கிடைத்தாலே பயிர் மீண்டும் புத்துயிர் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி கூறியதாவது: நன்கு விளைந்த பயிரில் தான் இந்த நோய் ஏற்படும். மாவட்டத்தில் முதன் முறையாக இந்நோய் தாக்கி உள்ளது. காற்று, வெயில் போதிய அளவு கிடைக்காததே இந்நிலைக்கு காரணம். விதைப்பு முறையில் நெருக்கம் காட்டியதன் விளைவாக இது நடந்துள்ளது. "திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றுமும் இந்நிலைக்கு காரணம்,என மதுரை குழுவினர் தெரிவித்துள்ளனர். எட்டு அடிக்கு ஒரு இடைவேளி பிரித்து விட்டால் நோய் சரியாகிவிடும். மேலும் அசிபேட், மேன்கோசன் மருந்துகளை ஆலோசனையின்படி தெளித்து நோயை விரட்டலாம், என்றார்.
குறிச்சொற்கள்: செய்திகள், நெல் பயிர்களில் 'லட்சுமி நோய்' : மதுரை குழுவினர் ஆய்வு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது