இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ராசிபுரம்:தெளிப்பு நீர் கருவிக்கு 50 சதவீத மானியம் வழங்கல்: உதவி இயக்குனர்



"தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் வாங்க 50 சதவீதம் அல்லது 7,500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது' என, எலச்சிபாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் லோகநாத பிரகாசம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாளுக்கு நாள் குறைந்து வரும் நீரின் அளவை கருத்தில் கொண்டு அரசு புதிய நீர் பாசன முறைகளை பரிந்துரை செய்து வருகிறது. குறைவாக உள்ள நீர் அளவைக் கொண்டு அதிகமான பரப்பளவில் பயிர் சாகுபடி செய்ய மிக சிறந்த முறையாக தெளிப்பு நீர்பாசன முறை உள்ளது. பயறு வகை மற்றும் நிலக்கடலை பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்க தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு தெளிப்பு நீர் கருவிகளை வாங்கி கொள்ள 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 7,500 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தெளிப்பு நீர் கருவிக்காக விலைப்புள்ளி பெற்று, மானியம் போக மீதம் உள்ள தொகைக்கு டி.டி., எடுத்து சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களுடன் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பம் செய்பவர்களுக்கு விரைவில் தெளிப்பு நீர் பாசன கருவிகள் சப்ளை செய்ய உத்தரவு வழங்கப்படும். மொத்தம் 24 ஹெக்டேர் பரப்பளவிற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதால், தெளிப்பு நீர் பாசன கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் எலச்சிபாளையம் வட்டார வேளாண் துறை அலுவலர்களை அணுகி உரிய ஆலோசனை பெற்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment