இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

லாபம் மிகுந்த விறால் மீன் வளர்ப்பில் தொழில் முனைவோர் ஈடுபடலாம் : விஞ்ஞானிகள் அழைப்பு

லாபம் மிகுந்த விறால் மீன் வளர்ப்பு தொழிலில் நெல்லை மாவட்ட தொழில் முனைவோர்கள் ஈடுபடலாம் என பாளை. சேவியர் கல்லூரி நன்னீர் விறால் மீன் வளர்ப்பு மையத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பாளை. சேவியர் கல்லூரியில் நன்னீரில் விறால் மீன் வளர்ப்பு, ஆராய்ச்சி மையம் கடந்த 2008ம்ஆண்டு செப்டம்பரில் துவக்கப்பட்டது. புதுடில்லி தேசிய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் அளித்த 3.2 கோடி ரூபாய் நிதியுதவியின் மையம் இயங்கிவருகிறது. விறால் மீன் குஞ்சு உற்பத்தியை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்துவது, உற்பத்தியை 25 டன்னில் இருந்து 200 டன்னாக உயர்த்துவதை நோக்கமாக கொண்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புவவேஸ்வர் நன்னீர் மீன்வளர்ப்பு மத்திய மையம், சென்னை புதுகல்லூரியும் இத்திட்டத்தில் இணைந்து செயல்படுகிறது. ஆரைக்குளம், முக்கூடல், சுத்தமல்லி, கிருஷ்ணாபுரம், வல்லநாடு, ஸ்ரீவைகுண்டம், மன்னார்புரத்தில் விறால்மீன் குஞ்சு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.



அதிகாரிகள் ஆய்வு : புதுடில்லி தேசிய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தை சேர்ந்த அகர்வால், புவனேஸ்வர் மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி சாகு, விஞ்ஞானி ஹனிபா, தூத்துக்குடி மீன்வளர்ப்புக்கல்லூரி முன்னாள் டீன் சுந்தர்ராஜன் உள்ளிட்ட குழுவினர் சேவியர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நன்னீர் விறால் மீன் வளர்ப்பு மையத்தை பார்வையிட்டனர். மீன் குஞ்சுகள் உற்பத்தி, விறால் மீன் வளர்ப்பு முறைகளை ஆய்வு செய்தனர். கல்லூரி முதல்வர் அல்போன்ஸ்மாணிக்கம், ஜான் டி.பிரிடோ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



விறால் மீன் வளர்ப்பு பாளை. யில் பயிற்சி : பின்னர் அவர்கள் கூறியதாவது: விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு தொழிலில் உற்பத்தியை பெருக்கவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் உலக பாங்க் முதற்கட்டமாக 1,200 கோடி ரூபாயை அளித்துள்ளது. விறால் மீன் வளர்ப்பு நம் பகுதிக்கு ஏற்ற தொழில். லாபகரமானது. நன்னீரில் வளர்க்கப்படும் முதல்தரமான விறால் மீன்கள் தோல் மூலம் மட்டுமின்றி தண்ணீருக்கு வெளியேயும் சுவாசிக்கும் திறன் கொண்டவை.
விறால் மீனில் முள் இருக்காது. மருத்துவக்குணம் அதிகமுள்ளது. உணவுக்கு பயன்படுத்தலாம். சுவை மிகுந்தது. வெளிநாடுகளில் விறால் மீனுக்கு கடும் கிராக்கி உள்ளது. தமிழகம், ஓரிசாவில் விறால் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாளை. சேவியர் கல்லூரியில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் விறால் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடக்கிறது. விறால் மீன் வளர்ப்புத்தொழிலில் ஈடுபட முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது. இடவசதி, தண்ணீர் இருக்க வேண்டும். விறால் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.
விறால் மீன் வளர்ப்பு, வளர்ச்சி முறைகள், தொழில் நுட்ப முறைகள் குறித்த விளக்க கையேடுகள், சி.டி.,க்கள் வழங்கப்படும். கள ஆய்வு மூலம் தொழில்நுட்ப விளக்கங்கள் அளிக்கப்படும். படக்காட்சிகள் காட்டப்படும். ஆர்வமுள்ள, தகுதிவாய்ந்தவர்களுக்கு பாங்க் கடன், மானியம் பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment