இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விருதுநகர் :விவசாயிகளுக்கு 65 சதவீதம் மானியம்


விருதுநகர் வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குனரின் செய்திக்குறிப்பு: தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் துல்லிய பண்ணைய சாகுபடி முறையில் மக்காச் சோளம், பருத்தி, கரும்புபோன்ற பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்து நீரில் கரையும் உரங்களிட்டுபயிர் வளர்க்கும் திட்டம் தற்போது விருதுநகர் வட் டாரத்தில் செயல்பாட்டில் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 65 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி ஒரு எக்டேர் விளை நிலப்பரப்பில் மட்டுமே சொட்டு நீர்பாசனம் அமைக்கவும் அதற்குத் தேவையான இடு பொருட்களை மானிய விலையில் பெறவும்தகுதியுடையவர் ஆவார். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை 04562 252 740 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment