இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ராபி பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகள் பயன்பெற கலெக்டர் அழைப்பு

ராபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்திட தஞ்சாவூர் கலெக்டர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்டோபர் மாதம் துவங்கி மார்ச் மாதம் முடிவடையும் ரபி பருவத்தில் பயிரிடப்படும் கடலை, மக்காச்சோளம், எள், உளுந்து, பயறு, கரும்பு, வாழை, பருத்தி, வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய மார்ச் 31ம் தேதி கடைசி நாளாகும். ஏக்கர் வாரியாக பிரிமியத்தொகை கடலைக்கு 356 ரூபாய், உளுந்து 47 ரூபாய், பயறு 65 ரூபாய், எள் 113 ரூபாய், கரும்பு ஆயிரத்து 752 ரூபாய், வாழை, 16 ஆயிரத்து 468 ரூபாயாகும். ஏக்கருக்கு உத்தேச மகசூலுக்கு காப்பீடு செய்யும் மதிப்பு கடலை 17 ஆயிரத்து 800 ரூபாய், உளுந்து இரண்டாயிரத்து 340, பயறு மூன்றாயிரத்து 268, எள் ஐந்தாயிரத்து 648, கரும்பு 53 ஆயிரத்து 92, வாழை இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 736 ரூபாயாகும். இதில், கடலை, உளுந்து, பயறு, எள், கரும்புக்கு மார்ச் 31க்குள்ளும், வாழைக்கு ஃபிப்ரவரி 28க்குள்ளும் பிரிமியத்தொகை செலுத்த வேண்டும். மொத்த பிரிமியத்தொகையில் கடன் வாங்கும் அனைத்து விவசாயிகளுக்கும் 50 சதவீத மானியமும், கடன் பெறாத விவசாயிகள், சிறு, குறு விவசாயிகளுக்கு 55 சதவீத மானியமும், மற்றவர்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும். உத்தேச மகசூலைவிட கூடுதல் மகசூலுக்கு பிரிமியம் செலுத்த விரும்புவோர் கூடுதல் பிரிமியம் செலுத்தலாம்.தஞ்சை மாவட்டத்தில் கரும்பு, உளுந்து, பயறு சாகுபடி செய்யும் அனைத்து பிர்கா விவசாயிகளும், கடலை சாகுபடி சய்யும் ஒரத்தநாடு வட்டார விவசாயிகள், சில குறிப்பிட்ட பிர்கா விவசாயிகளும் இத்திட்டத்தில் பங்கேற்கலாம்.

மக்காச்சோளம், வாழை, எள் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யும் சில பிர்கா விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அல்லது திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியப்பனை நேரில் அல்லது 94437 80661 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம், என கலெக்டர் சண்முகம் கேட்டுக் கொண்டார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment