இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நெல் கொள்முதல் விலையுடன் 50 ரூபாய் ஊக்கத்தொகை

திருச்சி காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு தலைவர் நாகராஜன் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன் கருதியும், நெல் உற்பத்தியை அதிகரிக்கவும், நெல் கொள்முதல் விலையுடன் ஒரு குவிண்டாலுக்கு 50 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும் நெல் ஆதரவு விலையான சன்ன ரகத்துக்கு ஆயிரத்து 50 ரூபாய், மோட்டா ரகத்துக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது வழங்கப்படும் 50 ரூபாயும் சேர்த்து சன்ன ரகத்துக்கு ஆயிரத்து 100 ரூபாயும், மோட்ட ரகத்துக்கு ஆயிரத்து 50 ரூபாயும் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் காங்கிரஸ் விவசாயிகள் சார்பில் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். கேரள மாநில அரசு வழங்குவது போல தமிழக அரசும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஆயிரத்து 200 ரூபாய் வழங்க வேண்டும். நெல் உற்பத்தி செலவு அதிகரிப்பு உர விலை உயர்வு, விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காதது, காலம் தவறிய பருவமழை, புவி வெப்பமடைதல் காரணமாக நெல் உற்பத்தி இந்தியா முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனால், இந்தியாவில் உணவு பாதுகாப்பை கருத்தில்கொண்டு அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இந்நிலையில், உள்ளூர் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், அரிசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஆயிரத்து 500 ரூபாய் ஆதரவு விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment