இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மானியம்

"விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு மானியம் வழங்குகிறது', என தென்காசி-வாசுதேவநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் தரமான விதை உற்பத்தி செய்திட விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. சுத்தி செய்தி சான்று அட்டை பொருந்திய விதைகளை வினியோகம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல வாகனம், எடைபார்க்கும் இயந்திரம், ஈரப்பதமானி, சாக்கு தைக்கும் இயந்திரம் போன்றவைகளையும், சுத்திகரிப்பு இயந்திரங்களையும் உள்ளடக்கி விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 9 லட்சத்து 98 ஆயிரத்து 491 ரூபாய் செலவு ஆகிறது.


இதில் 50 சதவீத தொகை பாங்க் கடனும், திட்ட இறுதி மானியமாக 4 லட்சத்து 99 ஆயிரத்து 490 ரூபாய் காசோலையும் வழங்கப்படுகிறது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த மானியம் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியராஜாவிற்கு விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மானிய தொகைக்கான காசோலையை வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் வழங்கினார்.நிகழ்ச்சியில் மானாவாரி திட்ட உதவி செயற்பொறியாளர் மற்றும் வாசுதேவநல்லூர் வேளாண்மை அலுவலர் ராமசாமி, துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்லையா, பால்ராஜ், சம்சுதீன், அண்ணாத்துரை உடனிருந்தனர்.இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் கூறியுள்ளார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment