இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

திடீர் மழை காரணமாக நெல் அறுவடை பணி பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் சம்பா போக நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதித்துள்ளனர். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விழுப்புரம் மாவட்டத் தில் கடந்த சில தினங் க ளாக பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் காலை 8 மணி வரை செஞ்சியில் 12 மி.மீ., மழையும், உளுந்தூர்பேட் டையில் 10 மி.மீ., வானூரில் 5 மி.மீ., சங்கரா

புரத்தில் 3 மி,மீ., விழுப்புரத்தில் ஒரு மி.மீ., அள வும் மழை பெய்துள்ளது.
தற்போது மாவட்டம் முழுவதும் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி சம்பா போகம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெள்ளை பொன்னி நெல் ரகம் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் திடீர் மழையின் காரணமாக வயலில் நன்கு விளைந் துள்ள நெல் மணிகள் முளை விடத் துவங்கியுள் ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதித் துள்ளனர்.முன்னதாக கடந்த 8 மற் றும் 9ம் தேதிகளில் மாவட் டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கலெக் டர் பழனிசாமி விவ சாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இருந்தாலும் அறுவடையை தள்ளி வைக்க முடியவில்லை.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment