இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கரும்பு வெட்டுவதை தடுக்கக் கூடாது எனக்கோரி விவசாயி மனுத்தாக்கல் : கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை : மதுரை மாவட்டம் ஏ.கொக்குளத்தில் கரும்பு வெட்ட தடுக்க கூடாது என கோரி விவசாயி தாக்கல் செய்த மனு குறித்து கலெக்டர், எஸ்.பி., தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஏ.கொக்குளத்தை சேர்ந்த கரும்பு விவசாயி மொக்ககாளை தாக்கல்செய்த ரிட் மனு: மூன்று ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளேன். இந்த கரும்பை வெட்ட ஏற்கனவே டி.மேட்டுப்பட்டி தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்தேன். இதன் மூலம் கரும்பு விவசாயத்திற்கு ஆலை நிர்வாகம் 46 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கியது. தமிழக அரசு கரும்பு டன்னுக்கு ஆயிரத்து 505 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது.
எனக்கு விவசாயத்திற்கு கூடுதலாக பணம் தேவைப்பட்டதால் வெளிநபர்களிடம் இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி கரும்பு வளர்த்தேன். கடனிலிருந்து மீளமுடியவில்லை. ஆலையுடன் செய்த ஒப்பந்தத்திலுள்ள ஒரு பிரிவில், ""ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி கரும்பை ஆலைக்கு கொடுக்காத பட்சத்தில் மத்திய அரசு நிர்ணயித்த கரும்பு விலையில் 20 சதவீதத்தை அபராதமாக செலுத்தலாம்,'' என உள்ளது. அதன்படி 20 சதவீத அபராதத்தை செலுத்த தயாராக இருப்பதாக ஆலை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினேன்.
நான் கரும்பை வெட்டவும், வெல்லம் காய்ச்சவும் தடுக்க கூடாது எனவும் கோரினேன். ஆலை தனி அதிகாரி அனுமதியளிக்கவில்லை. கரும்பு வெட்ட நடவடிக்கை எடுக்கின்றனர். எனவே கரும்பை நான் வெட்டுவதை தடுக்க கூடாது. சொந்தமாக வெல்லம் காய்ச்சவும் தடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் என்.சதீஷ்பாபு, ராஜேஷ் ஆஜராயினர்.
""இம்மனு குறித்து கலெக்டர், எஸ்.பி., சர்க்கரை ஆலை தனி அதிகாரி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி,'' நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் உத்தரவிட்டார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment