இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க பி.ஏ.பி., விவசாயிகள் கடும் எதிர்ப்பு : முதல் மண்டலத்துக்கு வரும் 22ம் தேதி திறக்க கோரிக்கை

அணைக்கு தண்ணீர் திறக்க பி.ஏ.பி., விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ""நான்காம் மண்டலத்துக்கு குறைவான நாட்களே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், முதல் மண்டல பாசனத்துக்கு வரும் 22ம் தேதி கட்டாயமாக தண்ணீர் திறக்க வேண்டும்,'' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் குறைகேட்பு கூட் டம் கலெக்டர் சமயமூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள், ""பி.ஏ.பி., திட்டத்துக்கு சிறிதும் தொடர்பில் லாத உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க கூடாது. வரும் 22ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என நம்பி, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச் சோளம், நிலக்கடலை பயிர்கள் கருகி விடும். அறிவித்தபடி, வரும் 22ம் தேதி முதல்மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்தே ஆக வேண்டும். உப்பாறு அணைக்கு ஆதரவாக அமைச்சர்கள் தலையிடக் கூடாது,'' என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், உடுக்கம்பாளையம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பரமசிவம் உள்ளிட்ட விவசாயிகள் கூறியதாவது: பி.ஏ.பி., திட்டத்தில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா 135 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும். ஆனால், சமீ பத்தில் நிறைவடைந்த நான்காம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஆக., 23ம் தேதியில் இருந்து 68 நாட்களுக்கு மட்டுமே தலா 17 நாட்கள் என்ற அடிப்படையில் நான்கு சுற்றுகளாக தண்ணீர் திறக்கப்பட்டது. "அணை களின் நீர்வரத்தை பொறுத்து, கூடு தலாக 22 நாட்களுக்கு தண்ணீர் வழங் கப்படும்,' எனவும் உறுதியளிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 4ம் தேதியுடன் நான்காம் மண்டல பாச னம் நிறைவடையும் போது, கூடுத லாக 22 நாட்கள் கோரிக்கை நினை வூட்டப்பட்டது. மழைநீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்தும், காண்டூர் கால்வாய் உடைப்பு காரண மாக, திருமூர்த்தி அணைக்கு நீர் வரத்து துண்டிக்கப்பட்டது. இத னால், 22 நாட்களுக்கு பதிலாக ஒன் பது நாட்களுக்கு மட்டுமே கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. நான்காம் மண்டல பாசனத்துக்கு மொத்தம் 77 நாட்கள் தண்ணீர் விடப்பட்டது. தண்ணீர் இருப்பு ஓரளவு நல்ல நிலையில் இருப்பதால், முதல் மண் டலத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க கோரிக்கை விடப்பட்டது. இதனால், திருமூர்த்தி அணையில் இருந்து வரும் 22ம் தேதி வரை தண்ணீர் திறக்காமல் இருந்தால் மட் டுமே, அணை தன் முழு கொள்ள ளவை எட்டும்; முதல்மண்டல பாச னத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
வேறு வழியின்றி, பட்டம் தவிர்ந் தாலும் பரவாயில்லை என கருதி, வரும் 22ம் தேதி முதல் மண்டலத் துக்கு தண்ணீர் திறக்க, அரசு ஆணை பெறும்படி, கண்காணிப்பு பொறி யாளரிடம் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். வரும் 22ம் தேதி தண் ணீர் திறக்கப்பட்டால் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பு பாசனம் பெறும். இந்நிலையில், பி.ஏ.பி., திட்டத்துக்கு சிறிதும் தொடர்பு இல்லாத, உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க, பொதுப்பணித்துறை அதிகாரி களுக்கு அமைச்சர் வாய்மொழி உத் தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. தமிழக அரசால் 1991ம் ஆண்டு நிய மிக்கப்பட்ட "ஸ்டாண்டிங் இரி கேஷன் அண்டு வாட்டர் ரிசோர்சஸ் கமிஷன்', பி.ஏ.பி., திட்ட திரு மூர்த்தி நீர் தேக்கத்துக்கும், உப்பாறு அணை பாசனத்துக்கும் எவ்வித சம் பந்தமும் இல்லை; உப்பாறு அணை யினர் பி.ஏ.பி., நீரை கோருவதற்கு உரிமை இல்லை' என அறிக்கை சமர்பித்துள்ளது. 1994ம் ஆண்டு அரசு உத்தரவில் (பொ.ப.து.,506) சில நிபந்தனை களின் பேரில், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அதில், "உப்பாறு அணைக்கு பி.ஏ.பி., திட்டத்தில் இருந்து, அதன் நீர் இருப்பு திருப்திகரமானதாக இருக்கும் காலங்களில், ஆண்டு தோறும் அதிகபட்சமாக 300 மில் லியன் கன அடி தண்ணீரை, புஞ்சை பயிர்களுக்கு வழங்கலாம்; பி.ஏ.பி., மண்டல பாசனங் களுக்கு தண்ணீர் விடும் முன்போ, பாசன காலம் முடிந்த பின்போ ஆண் டுக்கு ஒரு முறை இந்நீர் வழங்கப் படலாம்; "மழையற்ற காலங்களில் பி.ஏ.பி., திட்ட நீரை உப்பாறு அணைக்கு விட வேண்டும்,' என கோருவதற்கு உப்பாறு அணை ஆயக்கட்டுதாரர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை; பி.ஏ.பி., திட் டத்தில் துணைப்பாசனமாக மட் டுமே உப்பாறு பாசனம் அங்கீகரிக் கப்படுகிறது, ' என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி, நீர்இருப்பு திருப்திகர மாக இல்லாத நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கூடாது. தற்போதைய நீர் இருப்பையும், வரும் மே மாதம் வரையிலான எதிர் பார்ப்பு வரவான மூன்று டி.எம்.சி., தண்ணீரையும் சேர்த்தே, முதல் மண் டலத்துக்கு 85 நாட்களுக்கு தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கும் வரவு பொய்த்துப் போனால், 85நாட்கள் பாசனம் கிடைக்காது.
சட்டபூர்வ ஆயக்கட்டுதாரர்களுக்கே 135 நாட்களுக்கு பதில் 68 நாட்கள் தண்ணீர் கிடைக்கும் நிலை யில், உப்பாறு அணைக்கு ஆண்டு தோறும் சட்டத்தை மீறி, தண்ணீர் திறக்கப்படுவதை கடுமையாக ஆட்சேபிக்கிறோம்
பி.ஏ.பி., பாசன சங்க தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்றவர் களை கலந்து ஆலோசித்து தான் தண் ணீர் திறக்க வேண்டும் என விதி முறை உள்ளது. அதையும் மீறி தண் ணீர் திறப்பது சட்டத்துக்கு புறம் பானது. எங்களை அவமதிப்பது. கடந்த காலங்களில் அரசு ஆணை பெற்றே உப்பாறு அணைக்கு தண் ணீர் திறக்கப்படும். 2003ம் ஆண்டு அவ்வாறு அரசாணை பெறப்பட்ட போது, பாசனசங்கங்கள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டது. தற்போது, உயர்நீதிமன்றத்தின் தடையாணை மீறப்பட்டு, உப்பாறு அணைக்கு தண்ணீர் விடுவதை கடுமையாக ஆட்சேபிக்கிறோம். அமைச்சர்களின் வாய்மொழி உத்தரவுகளுக்கு தண்ணீர் திறந்து விட்டு, பின் அரசாணை பெறுவது வாடிக்கையாக உள்ளது. திருமூர்த்தி அணையில் இருந்து 48 மீ., தூரத்தில் அரசூர் ரெகுலேட் டர் உள்ளது. அங்கிருந்து உப்பாறு அணை 50 கி.மீ., தூரத்தில் உள்ளது. முறையான கால்வாய் இல்லை; ஓடையில் தான் தண்ணீர் செல்ல வேண்டும். இந்த தூரம் வரை 17 தடுப்பணைகள் உள்ளன. வினாடிக்கு 500 கன அடி திறக்கப்பட்டால், உப் பாறு அணைக்கு 100 கனஅடிதான் சென்று சேரும். தண்ணீர் வீணாகும், உப்பாறு விவசாயிகளுக்கு பலன் கிடைக்காது.உப்பாறு அணை பாசன விவ சாயிகளுக்கு, பி.ஏ.பி., தண்ணீர் சென் றால்தான், பயிர்கள் பலன் தரும் என்ற சூழ்நிலை இல்லை. முதல் மண்டலத்தில் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் காத்துக்கிடக்கின்றன. உப்பாறு அணைக்கு செல்லும் ஓடையின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதன் கொள்ளளவு 300 மில்லியன் கனஅடி. இந்த அணை நிறைந் தால்தான், உப்பாறு அணைக்கு தண்ணீர் செல்லும். உப்பாறு அணைக்கு செல்லும் ஓடையில், முறைகேடாக நீர் உறிஞ்சப்படும். சில சுயநலவாதி களுக்காக 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட விவசாயகுடும்பங்களின் வாழ்வை பலிகடா ஆக்க கூடாது. எனவே, உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment