இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பருத்திக்கு நிலையான விலை கிடைக்க வேண்டும் உடுமலை விவசாயிகள் வலியுறுத்தல்

"அறுவடை துவங்கியுள்ள நிலையில் பருத்திக்கு நிலையான விலை கிடைக்க இந்திய பருத்தி கழகத்தின் மூலம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்', என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர். மிக நீண்ட இழை மற்றும் நடுத்தர பருத்தி ரகங்கள் இப்பகுதியில் பயிரிப்பட்டு, தற்போது அறுவடை துவங்கியுள்ளது. மிக நீண்ட இழை பருத்தி குவிண்டாலுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும், மத்திய இழை பருத்தி 3 ஆயிரத்து 500 ரூபாய் வரையும் உள்ளூர் கொள்முதல் மையங்களில் விலை கிடைக்கிறது.
உடுமலை பகுதியில் அதிகளவு மிக நீண்ட இழை பருத்தி பயிரிடப் பட்டுள்ளது. இந்தாண்டு புரூட்டோனியா புழுத்தாக்குதல், தொழிலாளர் மற்றும் உரத்தட்டுபாடு காரணமாக சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், அறுவடை தீவிரமடையும் போது விலை சரியாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசு பருத்திக்கான ஆதார விலையை நிர்ணயிக்கும் அடிப்படையில் இந்திய பருத்தி கழகம் பருத்தியை கொள்முதல் செய்கிறது. கடந்தாண்டு பருத்தியை கொள்முதல் செய்ய மத்திய பருத்தி கழகம் மற்றும் தனியார் முன்வராததால் உடுமலை பகுதியில் பருத்தி பயிரிட்ட விவசாயிகள் பாதிப்பிற்குள்ளானார்கள்.பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பருத்தியை விற்பனை செய்ய முடியாமல், இருப்பு வசதிகளும் இல்லாமல் விவசாயிகள் வேதனையடைந்தனர். இதனால், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தின் போது பருத்தி பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டினர். தனியார் விதை நிறுவனம் மற்றும் அரசு குறுந்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டதால் விவசாயிகள் பருத்தி பயிரிட முன்வந்தனர். பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் சாகுபடி பணிகளை செய்த விவசாயிகள் நல்ல விலை கிடைக்காவிட்டால் விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது.பருத்தி விவசாயிகள் கூறியதாவது:பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் முழுமையாக கிடைப்பதில்லை. பருத்தி செடிகள் நோய்த்தாக்குதலால் பாதிக்கப்பட்ட போது முறையான ஆலோசனைகள் கிடைக்கவில்லை. இதனால், சாகுபடி செலவு பல மடங்கு உயர்ந்தது. சாகுபடியில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க மத்திய பருத்தி கழகத்தின் மூலம் பருத்திக்கு நிலையான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment