இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

காய்ப்பு குறைந்ததால் துவரை விவசாயிகள் பாதிப்பு : கேள்விக்குறியாகும் மானாவாரி சாகுபடி.

ஆண்டிபட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள துவரை செடிகளில் காய்ப்பு குறைந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஆண்டிபட்டி பகுதியில் தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, ராயவேலூர், ராமகிருஷ்ணாபுரம், அழகாபுரி, வண்டியூர், ராசக்காள் பட்டி உட்பட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி சாகுபடியில் துவரை, நிலக்கடலை, பருத்தி, சிறுதானியம், பயறு வகைகள் அதிகம் உள்ளன. ஜூலை, ஆகஸ்ட் களில் பெய்த மழையை பயன்படுத்தி விதைக்கப் பட்டு ஜனவரி, பிப்ரவரி யில் அறுவடை துவங்கும். இப்பகுதி விவசாயிகள் பல ஏக்கர் நிலங்களில் இந்த ஆண்டும் துவரை சாகுபடி செய்துள்ளனர்.
துவரை பத்து மாத பயிர் என்பதால் அவ்வப்போது பெய்த மழையை பயன்படுத்தி செடிகளை வளர்த்து பராமரிப்பு செய்து வந்தனர். புழு, பூச்சி தாக்குதலுக்கு பல மருந்துகளை பயன்படுத்தினர். எட்டு முதல் பத்து மாதம் ஆகியும் உயரமாக வளர்ந்த பல செடிகளில் பூ எடுக்கவில்லை. அறுவடை எடுக்க வேண் டிய நேரம் வந்தும் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயி ஞானபாரதி கூறுகையில், இந்த ஆண்டும் வழக்கம்போல் பல விவசாயிகளும் துவரை சாகுபடியில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். ஆண்டிபட்டி பகுதியில் குறைவான மழையே பெய்தது. பெய்த மழையும் சாகுபடி பயிருக்கு தேவையான நேரத்தில் கிடைக்கவில்லை.
பருவம் தவறி பெய்த குறைவான மழையால் மானாவாரி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காய்ப்புத்தன்மை இல்லாததால் விவசாயிகள் பலரும் துவரை செடிகளை வெட்டி அழித்து விட்டனர். ஏற்கனவே இப்பகுதியில் விவசாயம் நலிந்து வரும் நிலையில் மானாவாரி விவசாயமும் இந்த ஆண்டு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்றார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment