பயிர்க் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
5:15 PM செய்திகள், பயிர்க் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் 0 கருத்துரைகள் Admin
2009-2010-ம் ஆண்டு "ராபி' பருவப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய வேளாண் காப்பீடு நிறுவனம் அறிவித்துள்ளது.இதுகுறித்து அந்நிறுவனத்தின் மண்டல மேலாளர் சி. அன்பரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ""தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தின் மூலம் அனைத்து விதமான உணவுப் பயிர்கள் (தானியங்கள், சிறு தானியங்கள்) பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் மற்றும் வணிக தோட்டக்கலைப் பயிர்கள் காப்பீடுசெய்யப்படுகின்றன. இதில், நெல், கேழ்வரகு, சோளம், கம்பு, நிலக்கடலை, எள், உளுந்து. கொள்ளு, பருத்தி, கரும்பு, உருளைக்கிழங்கு, வாழை, மிளகாய், மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் வெங்காயம் ஆகிய பயிர்களும் அடங்கும். அனைத்து விதமான இயற்கைச் சீற்றங்களினால் (வெள்ளம், வறட்சி, பூச்சித் தாக்குதல் மற்றும் நோய்கள்) ஏற்படும் மகசூல் இழப்புக்கு இத்திட்டத்தில் காப்பீடு பெறலாம். மேலும், குத்தகைதாரர், வங்கி கடன் பெறுவோர் மற்றும் கடன் பெறாதோர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். சராசரி மகசூலின் 150 சதம் மதிப்பு வரை காப்பீடுசெய்யலாம். இத்திட்டத்தில் கடந்த 2000 முதல் 2008 வரை விவசாயிகளிடமிருந்து பிரிமியமாக ரூ. 116 கோடி பெறப்பட்டு, இழப்பீடாக ரூ. 1171 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் தமிழகத்தின் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 651 கோடி தொகை நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிகழாண்டில் "ராபி' பருவத்துக்கான பயிர்க் காப்பீடு இப்போது செய்யப்படுகிறது. அரசு மானியம் போக ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணம், கடைசி தேதி குறித்த விவரம் வருமாறு: நெல் (நவரை, கோடை): கடன் பெறும் விவசாயிகள் : கட்டணம் ரூ. 330, கடைசி தேதி 31.3.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகள்: கட்டணம் ரூ. 330, மற்ற விவசாயிகளுக்கு ரூ. 336. கடைசி தேதி 15.3.2010. கம்பு: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 236, கடைசி தேதி 31.3.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 236, மற்ற விவசாயிகளுக்கு ரூ. 262, கடைசி தேதி 15.1.2010. சோளம்: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 181. கடைசி தேதி 31.3.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 181, மற்ற விவசாயிகளுக்கு ரூ. 201. கடைசி தேதி 15.1.2010.கேழ்வரகு: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 179. கடைசி தேதி 31.3.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு,குறு விவசாயிகளுக்கு ரூ. 179. மற்ற விவசாயிகளுக்கு ரூ. 199, கடைசி தேதி 15.1.2010.மக்காச்சோளம்: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 49. கடைசி தேதி 31..3.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 49. மற்ற விவசாயிகளுக்கு ரூ. 54. கடைசி தேதி 15.1.2010.நிலக்கடலை: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 476. கடைசி தேதி: 31.3.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 476. மற்ற விவசாயிகளுக்கு ரூ. 528, கடைசி தேதி 15.1.2010.எள்: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 167. கடைசி தேதி 31.3.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 167. மற்ற விவசாயிகளுக்கு ரூ. 185. கடைசி தேதி 15.1.2010.சூரியகாந்தி: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 436, கடைசி தேதி 31.1.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு கட்டணம் ரூ. 436. மற்ற விவசாயிகளுக்கு ரூ. 484. கடைசி தேதி 15.1.2010.உளுந்து: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 21, கடைசி தேதி 31.3.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 21. மற்ற விவசாயிகளுக்கு ரூ. 23. கடைசி தேதி 15.2.2010.பச்சைப்பயறு: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 124. கடைசி தேதி 31.3.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 124. மற்ற விவசாயிகளுக்கு ரூ. 138. கடைசி தேதி 15.2.2010.கொள்ளு: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 105. கடைசி தேதி 31.3.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு குறு விவசாயிகளுக்கு ரூ. 105. மற்ற விவசாயிகளுக்கு ரூ. 116, கடைசி தேதி 15.1.2010.பணப் பயிர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள்:நெல், தரிசில் பருத்தி: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 1684. கடைசி தேதி 31.3.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ 1684, மற்ற விவசாயிகளுக்கு ரூ 1871, கடைசி தேதி 15.2.2010.பருத்தி: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 649. கடைசி தேதி 31.3.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 649. மற்ற விவசாயிகளுக்கு ரூ. 721. கடைசி தேதி 15.1.2010.மிளகாய்: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 574. கடைசி தேதி 31.3.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 574. மற்ற விவசாயிகளுக்கு ரூ. 638. கடைசி தேதி 15.1.2010.வாழை: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 7, 411. கடைசி தேதி 28.2.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 7, 411. மற்ற விவசாயிகளுக்கு ரூ 8,234. கடைசி தேதி 15.1.2010.மரவள்ளி: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 2, 200. கடைசி தேதி 28.2.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 2, 200. மற்ற விவசாயிகளுக்கு ரூ. 2, 444, கடைசி தேதி 15.1.2010.வெங்காயம்: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 938. கடைசி தேதி 31.1.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 938. மற்ற விவசாயிகளுக்கு ரூ. 1042. கடைசி தேதி 15.1.2010.கரும்பு: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 788. கடைசி தேதி 31.12.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 788. மற்ற விவசாயிகளுக்கு ரூ. 876. கடைசி தேதி 31.10.2010.உருளைக்கிழங்கு: கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 410. கடைசி தேதி 30.6.2010. கடன் பெறாத விவசாயிகள் - சிறு குறு விவசாயிகளுக்கு ரூ. 410. மற்ற விவசாயிகளுக்கு ரூ. 456. கடைசி தேதி 15.4.2010. இதில், மக்காச்சோளம், உளுந்து ஆகிய பயிர்களுக்கு உத்தரவாத மகசூல் கணக்கிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு வட்டாரத்திலும் பிர்காவிலும் மாநில அரசின் வேளாண் துறையினரால் பயிர் அறுவடைக் காலத்தில் (16-10) பயிர் அறுவடை சோதனைகள் நடத்தப்பட்டு, நடப்பு பருவத்தின் சராசரி மகசூலை கடந்த 3 அல்லது 5 ஆண்டு கால உத்தரவாத மகசூலோடு ஒப்பிடும்போது நடப்புப் பருவத்தின் மகசூல் எந்த அளவு குறைந்துள்ளதோ அந்த விகிதப்படி அவ்வட்டாரத்தில் உள்ள, காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் காப்பீடு செய்த தொகைக்கு ஏற்ப நஷ்ட ஈடு வழங்கப்படும். பயிர் கடன் பெறாத விவசாயிகள் முன்மொழிவுப் படிவத்துடன் கணினி சிட்டா அல்லது அடங்கல், கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெற்று தாம் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் பிரிமியத்தை குறிப்பிட்ட தேதிக்கு முன் செலுத்த வேண்டும். முன்மொழிவுப் படிவங்களை வேளாண் துறையினரிடமும் கூட்டுறவை வர்த்தக வங்கிகளிலும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 044-42051349, 42051350 ஆகிய தொலைபேசி எண்ககளுக்கும் 99403 26750, 93809 31331 ஆகிய செல்பேசி எண்களுக்கும் தொடர்புகொள்ளலாம்.''
குறிச்சொற்கள்: செய்திகள், பயிர்க் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது