இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பறவைக் காய்ச்சல் பரிசோதனைக் கூடம்
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில்,​ பறவைக் காய்ச்சல் பரிசோதனைக் கூடம் துவங்கப்படும் என,​ தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணைவேந்தர் ப. தங்கராஜு தெரிவித்தார்.நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடந்த பன்னாட்டு கோழியின கண்காட்சி துவக்க விழாவில் அவர் பேசியது:உலகளவில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில்,​ கோழிப் பண்ணைத் தொழில் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இறைச்சி,​ முட்டை உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்திய கோழிப் பண்ணைத் தொழிலே பிரதானமாக உள்ளது. தற்போதைய சூழலில் கோழிப் பண்ணையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றம் செய்தால் மட்டுமே சர்வதேச சந்தையில் நிலைத்து நிற்க முடியும்.மேலும், ​ உலகளாவியை வளர்சசி பெற முடியும். குறிப்பாக கோழி இறைச்சியை பதப்படுத்தி தரமான இறைச்சியாக ஏற்றுமதி செய்யலாம். இதேபோல்,​ கால்நடைச் செல்வம் மிகுந்துள்ள இந்தியாவில் இருந்து ஆட்டிறைச்சியையும் மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றம் செய்து ஏற்றுமதி செய்யலாம்.கோழிப் பண்ணையாளர்களுக்கு உதவ நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மூலம் ஏற்கெனவே தீவன பகுப்பாய்வுக் கூடம்,​ கோழியின ஆய்வுக் கூடம் இயங்கி வருகின்றன. தீவன பகுப்பாய்வுக் கூடத்தில் கட்டண அடிப்படையில் தீவனத்தைப் பரிசோதனை செய்து பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. கோழியின நோய்கள் குறித்தும் பரிசோதனை செய்து தகவல் தெரிவிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல் குறித்தும் பரிசோதனை செய்து தகவல் தெரிவிக்கும் வகையிலான ஆய்வுக் கூடமும் துவங்கப்படும். நவீன தொழில்நுட்பங்களை ஏற்று அதற்கேற்ப பண்ணைத் தொழிலை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையிலான பண்ணைகளை அதிகப்படுத்த வேண்டும். உயர்தர புரதம்,​ தீவன மூலப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். மரபணு மாற்ற கோழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக எண்ணிக்கையில் முட்டைகளை உற்பத்தி செய்யலாம்.மரபியல் மாற்றம் என்பது கோழிப் பண்ணைத் தொழிலுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இந்திய கோழிப் பண்ணைத் தொழிலுக்கான சந்தை,​ சர்வதேச அளவில் 2-வது பெரியது. ஆண்டுதோறும் 12 முதல் 15 சதம் வளர்ச்சியைப் பெற்று வருகிறது. 2012-ல் இந்திய கோழிப் பண்ணைத் தொழில் மதிப்பு ரூ.60 ஆயிரம் கோடியாக உயரும் என்றார் அவர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment