இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வேளாண் துறை முன்னேறினால் இந்தியா வல்லரசு நாடாகும் : பல்கலை டீன் தகவல்

""இந்தியாவில் விவசாயத்தை முன்னேற்றினால் பாதிப்பிரச்சனை குறைந்து வல்லரசு நாடாகும்,'' என, மதுரை காமராஜ் பல்கலை டீன் டேவிட்அமிர்தராஜன் தெரிவித்தார். மதுரை பாத்திமா கல்லூரியில், உலகப் பொருளாதார சரிவு நிலை குறித்த கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கில் அவர் பேசியதாவது: உலகப்பொருளாதாரத்தின் சரிவு நிலை என்பது புதிதல்ல. 1930 ல் நடந்த உலகப்போரிலிருந்தே உலகப் பொருளாதாரத்தின் நிலை மந்தமாக இருந்துள்ளது. இந்த பண வீக்கம் 2000 ல் இருந்து காணப்பட்டாலும், 2007ல் தான் மோசமான நிலைஅமெரிக்கா மூலம் வெளிப்பட்டது.
பணத்தட்டுப்பாடு வந்தபின்னும், டயோட்டோ கம்பெனியின் பங்குச்சந்தை புள்ளிகளில் சரிவுக்கு பின் தான் உலகப் பொருளாதாரம், சரிவு நிலையை நோக்கி போய் கொண்டு இருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது. இந்த தாக்கம் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், 2010 ல் குறைய வாய்ப்புள்ளது. 2011 ல் வளர்ச்சி நிலையை நோக்கி முன்னேறி 2020 ல் இந்தியா ஒரு வல்லரசு நாடாக ஆகிவிடும். நம் நாட்டைப் பொறுத்தவரையில் விவசாயத்துறையை முன்னேற் றினாலே பாதிப்பிரச்சனை குறைந்து வல்லரசு நாடாகிவிடும் என்றார்.
அமெரிக்காவைச் சார்ந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் மேகன் ஹேன்டர்சன், உற்பத்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் காரிபிரான்ட்லி, இயக்குனர் குழு மேலாண்மை டெக்ஸாஸ் ஆஸ்லேகிரேரிவாஸ் பொருளாதார சரிவு குறித்துப் பேசினர்.
பேராசிரியை ஆனந்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாத்திமா தலைமை வகித்தார். செயலாளர் எஸ்தர்மேரி முன்னிலை வகித்தார். திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அண்ணாமலை பல்கலை பேராசிரியர் செல்வராஜன், கொச்சின் அறிவியில் மற்றும் தொழில்நுட்ப பல்கலை பேராசிரியை மீராபாய், அருளானந்தர் கல்லூரி பேராசிரியர் ஆலமர், கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் மோகனசுந்தரம், பேராசிரியர் ஜமால்முகம்மது கலந்து கொண்டு பேசினர். பேராசிரியை ரெஜினாமேரி நன்றி கூறினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment