பெருஞ்சாணி அணை மீண்டும் திறப்பு
8:05 AM செய்திகள், பெருஞ்சாணி அணை மீண்டும் திறப்பு 0 கருத்துரைகள் Admin
குமரி மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் விவசாயத்திற்காக பெருஞ்சாணி அணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.குமரியில் கடந்த இரு மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக கோடைகாலத்தை உணர்த்தும் வகையில் சூரியன் சுட்டெரித்து வருகிறது. கும்பப்பூ சாகுபடி பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை வரை தண்ணீர் பாசனம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குமரி நீர் ஆதாரமான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் குறைவாகவே உள்ளன. பருவமழை பொய்த்ததும் இதற்கு ஒரு காரணமாகும்.பேச்சிப்பாறையில் தற்போது 28.03 அடி நீர்மட்டமும், பெருஞ்சாணியில் 51.55 அடி நீர்மட்டமும் உள்ளது. சித்தாறு ஒன்றில் 7.12 அடியும், சித்தார் இரண்டில் 7.21 அடியும், பொய்கையில் 1.30 அடி நீர்மட்டமும் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பேச்சிப்பாறையில் 39.35 அடியும், பெருஞ்சாணியில் 64 அடி தண்ணீரும் நீர்மட்டம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பேச்சிப்பாறைக்கு வினாடிக்கு 561 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வந்துகொண்டிருக்கிறது. பெருஞ்சாணியில் 44 கனஅடி தண்ணீர் உள்வரத்து வருகிறது. விவசாய பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 776 கனஅடி தண்ணீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. அடைக்கப்பட்டிருந்த பெருஞ்சாணி அணை நெற்பயிர்களின் பாசன வசதிக்காக நேற்று திறக்கப்பட்டது. பெருஞ்சாணி அணையில் இருந்து விநாடிக்கு 228 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
குறிச்சொற்கள்: செய்திகள், பெருஞ்சாணி அணை மீண்டும் திறப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது