இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சிவப்பு சாமந்திப்பூ சாகுபடி கோபி வட்டாரத்தில் அதிகரிப்பு

கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் நடப்பாண்டு சிவப்பு சாமந்தி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோபி அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப் பகுதிகளில் பல ஆண்டுகளாக நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள்தான் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.



விவசாய கூலியாட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் மாற்றுப் பயிரான மல்பெரி, மரவள்ளி கிழங்கு, சேனைக் கிழங்கு, தோட்டப்பயிர்களாக வெண்டை, கத்தரி மற்றும் பூ வகைகளான மல்லிகை, சம்பங்கி பூ, சிவப்பு சாமந்தி ஆகியவற்றை அதிகளவில் பயிரிடத் துவங்கினர்.



கோபி, சிறுவலூர், கடத்தூர், பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி, கொளப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பாண்டு அதிகளவில் சிவப்பு சாமந்தி பயிரிடப்பட்டுள்ளது. 90 நாள் பயிரான சிவப்பு சாமந்தி, தற்போது பூக்கள் விடத் துவங்கியுள்ளது. சிவப்பு சாமந்தி பூக்கள், கோபி பகுதியில் இருந்து கோவை, சேலம், நாமக்கல், திருப்பூர், கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.



கோபி பகுதியில் விளையும் பூக்களை, வியாபாரிகள் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று வாங்கிச் செல்கின்றனர். இதனால், விவசாயிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை இல்லை. அடுத்தாண்டு இவற்றின் சாகுபடி பரப்பளவு இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment