'விவசாயத்தை நவீனமாக்க வேண்டும்'
7:33 AM 'விவசாயத்தை நவீனமாக்க வேண்டும்', செய்திகள் 0 கருத்துரைகள் Admin
ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற கவலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது நவீன கருவிகள் வந்து விட்டன. பல் வேறு பண்ணை கருவிகள் வாங்க, அரசு மானியம் கொடுக்கிறது. நம்முடைய பாசன முறையை மாற்ற வேண்டும்; சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் போன்ற முறைகளில் நீர் பாய்ச்ச வேண் டும்; இதற்கு மானியமாக 65 சதவீதம் தரப்படுகிறது. நாம் ஏராளமான நீரை வீணாக்குகிறோம்; இதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. "ஹைடெக்' முறையில் விவசாயம் செய்வதன் மூலம் உற்பத்தி செலவை குறைக்க முடியும். விவசாயிகள் விதைப் பண்ணை அமைக்க முன்வர வேண்டும்; மல்டினேசன் கம் பெனிகள், விதையை உற்பத்தி செய்து நல்ல லாபம் சம்பாதிக் கின்றன; நாம், அவர்களை எதிர்பார்க்காமல் நாமும் விதை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் பெற முடியும். இதற்கு, முயற்சி தான் தேவை. விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பயறு வகை விதைகளுக்கு, அரசு மானியமாக கிலோவுக்கு 20 ரூபாய் கொடுக்கிறது. பயறு வகைகள் சாகுபடி செய்வது தற்போது குறைந் துள்ளது. தற்சமயம் பயறு வகைகளுக்கு நல்ல விலை கிடைக் கிறது. இச்சந்தர்ப்பத்தை பயன் படுத்தி விவசாயிகள் பயறு வகைகள் பயிரிட்டு நல்ல லாபம் பெறலாம்.
சாகுபடி செய்வதற்கு முன் மண் பரிசோதனை செய்வது மிக அவசியம்; மண் பரிசோதனை செய்ய மூன்று அடி குழி எடுத்து, அடிக்கு ஒன்று வீதம் குறிப்பிட்ட அளவு சாம்பிள் எடுத்து, பாலீத்தீன் பைகளில் போட்டு, மண் மாதிரிக்கு கொடுக்க வேண் டும். உங்களுடைய தோட்டத் தில் என்னென்ன சத்துக்கள் உள் ளன என்று தெரிந்தால் மட்டுமே, அதற்கேற்ப உரமிட முடியும். சரியான உரத்தை தேவையான அளவு இடும் போது, உற்பத்தி செலவு குறைகிறது. இவ்வாறு, ரவி பேசினார். வாவிபாளையம் ஊராட்சி தலைவர் கூறுகையில், ""விதைப் பண்ணை, துல்லிய பண்ணையம், நுண்ணீர் பாசனம் போன்றவற்றுக்கு 20 லட்சத்தில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது,'' என்றார்.நிகழ்ச்சியில், திருப்பூர் வேளாண் உதவி பொறியாளர் சுப்ரமணியம், கோவை மண் பரிசோதனை மூத்த அலுவலர் சபாரத்தினம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங் கேற்றனர்.
குறிச்சொற்கள்: 'விவசாயத்தை நவீனமாக்க வேண்டும்', செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது