போட்ட விதைகள் அனைத்தும் முளைக்க புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தணும்
7:32 AM செய்திகள், போட்ட விதைகள் அனைத்தும் முளைக்க 0 கருத்துரைகள் Admin
போட்ட அனைத்து விதைகளும் முளைக்க விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்திட வேண்டும் என வேளாண்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில், விதை கிராம திட்டத்தின் கீழ் பயிறு வகை சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
தி.மலை வேளாண்துறை இயக்குனர் வீரமணி, செய்யாறு உதவி இயக்குனர் சாந்தி பங்கேற்றனர். ஒரு ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்தால் குறைந்த பட்சம் ரூ.50 ஆயிரம் நிகர லாபம் பெறலாம். அதிக அளவில் பயிறு உற்பத்தியை பெருக்கி தனிநபர் வருமானத்தையும் அதிகரிக்கலாம். நாட்டின் பயிறுவகை தேவைகளுக்கும் உதவிடலாம்.
ஒரு கிலோ உளுந்து விதைக்கு 100 மில்லி நீர்த்த கந்தக அமிலம் சேர்த்து 2 நிமிடம் கலந்து 4 தடவை நல்ல நீரில் கழுவி நிழலில் உலர வைப்பதன் மூலம் அனைத்து விதைகளையும் முளைக்க செய்யலாம். நவீன தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கிலோவுக்கு ரூ.20 வீதம் விதை உளுந்துக்கு மான்யம் வழங்கப்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.உதவி வேளாண் அலுவலர்கள் பாதுஷா, சிவக்குமார், ராஜலட்சுமி ஆகியோர் செயல் விளக்கமளித்தனர்.
குறிச்சொற்கள்: செய்திகள், போட்ட விதைகள் அனைத்தும் முளைக்க
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது