இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாயிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல் நெல்லுக்கு ரூ.1500, கரும்புக்கு ரூ.2000 இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்

"நெல் குவிண்டாலுக்கு 1,500 ரூபாய், கரும்பு டன்னுக்கு 2,000 ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்' என, சேலத்தில் நடந்த விவசாய கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பிரச்னைகள், நெல், கரும்புக்கான உரிய விலை நிர்ணயம், கள்ளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, தேசிய ஊரக வேலையளிப்பு திட்டத்தை மாற்றியமைப்பது, விவசாயிகளின் நிலம் குறித்த சிட்டாவில் உள்ள முறைகேடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


விவசாயிகள் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கல்யாணம் நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை பெருகி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தை காப்பாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. விவசாயிக்கு முக்கிய தேவை நீர் ஆதாரம், வங்கி கடன் உதவி, உற்பத்தி செலவுக்கு மேல் லாபம், பயிர் இழப்பு ஏற்பட்டால் காப்பீட்டு தொகை ஆகியவை கிடைக்க வேண்டும்.கடந்த 1951ல் 51 மில்லியன் டன்னாக இருந்த அரிசி உற்பத்தி, தற்போது 210 டன்னாக உயர்ந்துள்ளது. அவ்வாறு இருந்தும் விவசாயத்தை மேம்படுத்தும் எந்தவித சலுகையும் இல்லாததால் பலர் வேதனைக்குள்ளாகின்றனர். வேளாண் துறைக்கு முக்கியத்துவம் இல்லை. இத்துறையை விவசாயிகள் நலத்துறையாக மாற்றம் செய்ய வேண்டும். கடந்த 2003ல் தேசிய விவசாய ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, விவசாயிகளின் பிரச்னைகள் குறித்த அறிக்கைகள் ஆணையத்துக்கு வழங்கப்பட்டது. அதில், மொத்த உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீத லாபம் அனைத்து பொருளுக்கும் வழங்க வேண்டும், நான்கு சதவீத வட்டியுடன் கடன் வழங்க வேண்டும். பயிர்களுக்கு காப்பீட்டு உதவி, விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம், இதர சலுகைகள் வலியுறுத்தப்பட்டன. மத்திய அரசு 71 ஆயிரத்து 280 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்ததாக கூறுகிறது. அவை அனைத்தும் ஏற்கனவே விவசாயிகள் செலுத்திய கடனையும் சேர்த்து கூறப்படுகிறது. மொத்தத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை தான் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றும் செயல்களில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment