இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மிளகாய் காப்பீடு தொகை வழங்குவதில் இழுபறி : விவசாயிகள் அதிருப்தி

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் பாதிக்கப்பட்ட மிளகாய் சாகுபடிக்கு காப்பீட்டு தொகையை பட்டுவாடா செய்வதில் இழுபறி நிலை நீடிப்பதால் விவசாயிகள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
விவசாயிகளின் பணமும், கடின உழைப்பும், விளைச்சலும் இயற்கை சீற்றங்களால் பயனற்றுப் போய்விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தானியங்கள், சிறு தானியங்கள், நெல், கேழ்வரகு, சோளம், கம்பு, நிலக்கடலை, எள், உளுந்து, கொள்ளு, பருத்தி, கரும்பு, உருளைக்கிழங்கு, வாழை, மிளகாய், மரவள்ளி, பூண்டு, இஞ்சி, அண்ணாசிப்பழம், மஞ்சள், வெங்காயம் ஆகிய பயிர்களை காப்பீடு செய்யலாம்.
இந்த பயிர்களுக்கு வெள்ளம், வறட்சி, பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பை விவசாயிகள் சந்திக்கும் பட்சத்தில், தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும்.
கடந்த ஆண்டில் கடலாடி தலுகாவை சேர்ந்த எஸ்.தரைக்குடி, உச்சிநத்தம், டி.எம்.கோட்டை, ஒச்சத்தேவன்கோட்டை, எம்.கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று ஆயிரம் ஏக்கரில் மிளகாய் பயிர்கள் பயிரிடப்பட்டன.
இந்த பயிர்களுக்கு இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 40 லட்சம் ரூபாய் வரை பிரிமியமாக செலுத்தியுள்ளனர். இந்தநிலையில், இப்பகுதியில் பயிரிடப்பட்ட மிளகாய் பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டதால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சந்திக்காத மசூல் இழப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர்.
இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், இழப்பீட்டு தொகையை பட்டுவாடா செய்ய மனமில்லாமல் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளை அலைக்கழிப்பு செய்கின்றனர். இந்த இழுபறி நிலை கடந்த சில மாதங்களாக தொடர்வதால் தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தின் மீது விவசாயிகள் வைத்திருக்கும் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment