வெள்ளை பொன்னி நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்வு
9:01 PM செய்திகள், வெள்ளை பொன்னி நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்வு 0 கருத்துரைகள் Admin
மேட்டூர் காவிரி கரையோரப்பகுதியில் சம்பா நெல் அறுவடை துவங்கி விட்டது. கடந்த ஆண்டை விட பொன்னி நெல் குவிண்டாலுக்கு 150 ரூபாய் கூடுதலாக கொடுத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.மேட்டூர் காவிரி கரையோரம் மற்றும் மேட்டூர் கால்வாய் பாசன பகுதியில் உள்ள காவேரிகிராஸ், கோல்நாயக்கன்பட்டி, பூலாம்பட்டி, செக்கானூர் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வது வழக்கம்.நடப்பாண்டில் பெரும்பாலான விவசாயிகள் வெள்ளை பொன்னி நெல்லையே அதிகம் சாகுபடி செய்தனர்.
இறுதி வரை சம்பா பாசனத்திற்கு தேவையான நீர் காவிரி மற்றும் மேட்டூர் கால்வாயில் திறந்து விடப்பட்டது. அதனால், காவிரி கரையோரப்பகுதியில் பொன்னி நெல் அமோகமாக விளைந்தது.தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது. சேலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், திருவண்ணாமலை, சேலம் பகுதியில் இருந்து அரிசி வியாபாரிகள் மொத்தமாக நெல்லை கொள்முதல் செய்து தங்கள் பகுதிக்கு எடுத்து செல்கின்றனர். கடந்த ஆண்டு பொன்னி நெல் குவிண்டால் 1,300 ரூபாய்க்கு விற்றது.நடப்பாண்டில் ஒரு குவிண்டால் வெள்ளை பொன்னியை வியாபாரிகள் அதிகபட்சம் 1,450 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் பொன்னி நெல் விலை குவிண்டாலுக்கு 150 ரூபாய் அதிகரித்துள்ளது. எனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொன்னி அரிசி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
குறிச்சொற்கள்: செய்திகள், வெள்ளை பொன்னி நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்வு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது