இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மஞ்சளாறு பாசன பகுதியில் நெல் விவசாயம் பாதிப்பு

வத்தலக்குண்டு, மஞ்சளாறு பாசன பகுதியில் நெல் விவசாயம் தண்ணீர் இல்லாமல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கிணற்று நீரை வைத்து வாழை, தக்காளி விவசாயம் செய்யப்படுகிறது.
மஞ்சளாறு பாசன பகுதிகளான தேவதானப்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.தும் மலப்பட்டி, கணவாய்ப் பட்டி, வத்தலக்குண்டு, கட்டகாமன்பட்டி, பழைய வத்தலக்குண்டு, கரட்டுப் பட்டி, குன்னுவாரன் கோட்டை ஆகிய ஊர்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக பருவமழை சரியாக இல்லை. இந்த பகுதியில் உள்ள செங்குளம்,மத்துவார்குளம், கணவாய்பட்டி கண்மாய்,வீரன்குளம்,பெரிய கண்மாய், குன்னுவாரன் கோட்டை கண்மாய் ஆகிய கண்மாய்கள் நிரம்பவில்லை. மஞ்சளாறு அணைக்கு நீர் ஆதாரமாக இருக்கும் கொடைக்கானல் மலைப்பகுதியிலும் போதிய மழை பெய்யாததால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை பெய்து கண்மாய்கள் நிரம்பி உபரி நீர்(மறுகால்) வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த ஆண்டில் மிக குறைந்த அளவு தண்ணீரே உள்ளது. கிணறுகள் உள்ள பகுதிகளில் வாழை, கரும்பு, தக்காளி போன்ற பயிர்களும், சோளம், கம்பு போன்ற மானாவாரி பயிர்களும் செய்து வருகின்றனர். போதிய மழை இன்றி விவசாயம் செய்ய முடியாமல் பொருளாதார நிலையில் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment