ஸ்டாபரி' சாகுபடியில் தொழிலாளர்கள் ஆர்வம்
7:38 AM செய்திகள், ஸ்டாபரி' சாகுபடியில் தொழிலாளர்கள் ஆர்வம் 0 கருத்துரைகள் Admin
மூணாறு பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் "ஸ்டாபரி' சாகு படியில் ஆர்வம் காட்டி வருகின் றனர்.மூணாறு பகுதியிலுள்ள தேயிலை தோட்ட தொழிலாளர் களின் உபரி வருமானத்திற்கு, சிறிய அளவிலான தோட்டங்களை எஸ்டேட் நிர்வாகங்கள் வழங்கி யுள்ளன. இவற்றில் பீன்ஸ், பூண்டு, பட்டாணி, கீரை வகைகள் போன்வற்றை தொழிலாளர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். "ஸ்டாபரி' பழத்திற்கு நல்ல விலை கிடைப்பதால், தற்போது பெரும் பாலான தொழிலாளர்கள் ஸ்டாபரி சாகுபடியில் ஈடுபட்டு வருகின் றனர். குளிர்கால பயிர் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் சாகுபடி செய்யப்படுகிறது. பழங்களை ஒருநாள் விட்டு ஒருநாள் பறித்து, கிலோ ஒன்றுக்கு 45 ரூபாய் வரை விற்கின்றனர். சிவன்மலை, லட்சுமி போன்ற எஸ்டேட் பகுதியில் ஸ்டாபரி அதிகளிவில் சாகுபடி செய்யப்பட் டுள்ளன.
குறிச்சொற்கள்: செய்திகள், ஸ்டாபரி' சாகுபடியில் தொழிலாளர்கள் ஆர்வம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது