ராமநாதபுரம்:மிளகாய்க்கு காப்பீடு செய்யும் வசதி பெருநாழியில் வெங்காய பயிர் சேர்ப்பு
7:36 AM செய்திகள், ராமநாதபுரம்:மிளகாய்க்கு காப்பீடு 0 கருத்துரைகள் Admin
திருவாடானை, மண்டபம் வட்டாரங்கள் நீங்கலாக, மற்ற ஒன்பது வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. பயிர் கடன் பெற்ற, கட்டாயத்தின் பேரில் பயிர்கடன் பெற்ற விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். இதன் மூலம் ஒரு ஏக்கர் மிளகாய் பயிருக்கு 12 ஆயிரத்து 144 ரூபாய் காப்பீடு செய்யப்படுகிறது. காப்பீடு தொகையில் 10.5 சதவீதம் பிரீமியம் தொகையாக 1275 ரூபாய் ஆகிறது. வங்கியில் பயிர் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கு பிரிமீயம் தொகையில் 50 சதவீதம், பெறாத சிறு, குறு விவசாயிகளுக்கு 55 சதவீதமும் கடன் பெறாத பிற விவசாயிகளுக்கு பிரீமியம் தொகையில் 50 சதவீதமும் மானியமாக அரசால் வழங்கப்படுகிறது. பயிர் கடன் பெற்ற விவசாயிகள் ஒரு ஏக்கர் மிளகாய் பயிருக்கு 638 ரூபாய், கடன் பெறாத சிறு, குறு விவசாயிகள் 574 ரூபாய் செலுத்தி இத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம். பயிர்கடன் பெறாத இதர விவசாயிகள் 638 ரூபாய் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.
இதற்கான பிரீமியம் தொகையை தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகள், கிராம வங்கிகள், தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் செலுத்தலாம். உத்தரவாத மகசூலுக்கும், நடப்பு பருவ மகசூல் குறைவிற்குமான வித்தியாசத்தில் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது . இத்திட்டத்தில் சேர ஜன.,15 இறுதிநாளாகும். வெங்காயம் பயிரில் இத்திட்டமானது கமுதி வட்டத்தில் பெருநாழி உள்வட்டத்துக்கு மட்டும் அறிவிப்பு செய்யப் பட்டுள்ளது. பிரீமியம் தொகையாக 1042 ரூபாய், சிறு, குறு விவசாயிகளுக்கு 938 ரூபாய் செலுத்தி இத்திட்டத்தில் பங்குபெறலாம். இதற்கும் ஜன., 15 இறுதிநாளாகும். மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜேந்திரன் இத்தகவலை தெரிவித்தார்.
குறிச்சொற்கள்: செய்திகள், ராமநாதபுரம்:மிளகாய்க்கு காப்பீடு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது