இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வேளாண்மை பொறியியல் துறையின் அலுவலகம் உடுமலையில் அமைப்பு

உடுமலை பகுதி விவசாயிகளுக்காக வேளாண்மை பொறியியல் துறை தற்காலிக அலுவலகம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் செயல்பட துவங்கியுள்ளது.
வேளாண் பொறியியல் துறை மூலம் மோட்டார், சொட்டு நீர் பாசனம், பவர் டில்லர், ரோட்டாவேட்டர் உட்பட பண்ணைக்கருவிகளுக்கு மானியம் அளிக்கப்படுகிறது. உடுமலை பகுதி விவசாயிகளுக்கான உதவி செயற்பொறியாளர் அலுவலகம் பொள்ளாச்சியில் இயங்கி வந்தது. திருப்பூர் மாவட்ட பிரிப்பிற்கு பின்னர் உடுமலை பகுதி தாராபுரம் உதவி செயற்பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டது.
விவசாயிகள் தாராபுரம் செல்வதற்கு அலைச்சல் ஏற்படுவதால் உடுமலையிலேயே பொறியியல் துறை அலுவலகம் துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், உடுமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் வாரந்தோறும் வியாழன்று பொறியியல் துறை தற்காலிக அலுவலகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளுக்கு தலா ஒரு இளநிலை பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிகாரிகள் வியாழன்று மானியத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்தல் மற்றும் தேவையான திட்டங்கள் குறித்த விளக்கங்களை அளிக்க உள்ளனர். கடந்த 31 ம் தேதி முதல் திட்டம் செயல்பாட் டிற்கு வந்துள்ளது. துவக்க விழாவில் பங்கேற்ற திருப்பூர் வேளாண்மை செயற்பொறியாளர் ஜெகனநாதனிடம் விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தினர் உடுமலையில் நிரந்தர அலுவலகம் உட்பட கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment