இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கத்தரி விவகாரம் முற்றுகிறது: பவார் மீது மத்திய அமைச்சர் பாய்ச்சல்




மாற்றப்பட்ட கத்தரிக் காயை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவது குறித்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.இந்த கத்தரிக் காயைப் பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு இடையே கருத்து மோதல் உருவாகி உள்ளது.இந்த விஷயத்தில் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்த கருத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் வெளிப்படையாக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பவாருக்கு ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதி உள்ளார். மரபணு மாற்றப்பட்ட கத்தரிக் காயை வர்த்தக ரீதியில் பயிரிடுவது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு மத்திய அரசுக்கு எல்லா உரிமையும் உண்டு. இது பொது மக்களின் உடல் நலன் தொடர்புடைய விவகாரம் என்று கடிதத்தில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.மரபணு மாற்றப்பட்ட கத்தரிக் காயை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவது பற்றி நிபுணர்கள் குழு எடுக்கும் முடிவே இறுதியானது. இதில் மத்திய அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று அமைச்சர் சரத் பவார் புதன்கிழமை கூறியிருந்தார்.இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதி உள்ளார். மரபணு மாற்ற கத்தரிக் காயை வர்த்த ரீதியில் அனுமதிப்பது தொடர்பாக நாடு முழுவதும் பொது விவாதத்தை நடத்தி வருகிறேன். மரபணு மாற்றப்பட்ட கத்தரிக் காய்தான், முதல் மரபணு மாற்ற உணவுப் பயிராகும். எனவே இது குறித்து எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்கள், கவலைகளை நான் நன்கு அறிவேன்.மரபணு மாற்ற உணவுப் பொருள்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நிபுணர் குழு சட்ட ரீதியான அமைப்பாக இருக்கலாம். ஆனால் பொது மக்களின் உடல் நலம் குறித்து கேள்வி எழுப்பப்படும்போது அதில் இறுதி முடிவு எடுக்க மத்திய அரசுக்கு முழு உரிமை உண்டு.இந்த கத்தரிக் காய் குறித்து உரிய கருத்துகளைத் தெரிவிக்குமாறு மரபணு மாற்ற கத்தரி அதிகம் பயிரிடப்படும் மாநிலங்களான மேற்கு வங்கம், ஒரிசா, பிகார், மகாராஷ்டிரம் உள்பட 6 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன். மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 50 விஞ்ஞானிகளிடமும் கருத்துக் கேட்டுள்ளேன்.ஜனநாயக மாண்புகளை ஏற்று நடக்கும் நமது நாட்டில் கருத்தொற்றுமை மூலமே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் (பவார்) ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.தற்போது நடந்து வரும் பொது விவாதம் வரும் ஜனவரி இறுதிவாக்கில் முடிந்துவிடும். பின்னர் நிபுணர்களின் கருத்துக்களையும் கேட்டு பிப்ரவரி 20-ம் தேதிக்குள் இறுதி முடிவுக்கு வர முடியும். அதன் பிறகு எனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பிப்பேன். அதுபோல் உங்களிடமும் சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆஸôத்திடமும் எனது அறிக்கையை சமர்ப்பிக்கிறேன். அதன் பிறகு இதில் இறுதி முடிவு எடுக்கலாம் என்று கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.மரபணு மாற்றப்பட்ட கத்தரிக் காய் பயிரிட்டால் அமோக விளைச்சல் கிடைக்கும். மேலும் பூச்சி தாக்காது என்று வெளிநாட்டு நிறுவனங்களால் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த கத்தரிக் காய் உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதோடு நமது நிலத்தின் வளத்துக்கும் கேடு விளைவிக்கும் என்று விவசாயிகள் சங்கத்தினரும் விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.இதையடுத்து இந்த கத்தரிக் காயைப் பயன்படுத்துவது குறித்து பொது விவாதம் நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment