பி.டி.கத்தரிக்காய்: மக்களின் உணர்வுப்படி முடிவெடுக்க வைகோ வலியுறுத்தல்
7:02 AM செய்திகள், பி.டி.கத்தரிக்காய்: மக்களின் உணர்வுப்படி முடிவெடுக்க வைகோ வலியுறுத்தல் 0 கருத்துரைகள் Admin
மரபணு மாற்ற உணவுப் பயிர்களை திணிக்க தமிழக அரசு முயற்சி:
மக்களின் விருப்பத்தை அறியாமல் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களை மக்களிடம் திணிக்க தமிழக அரசு முயல்வதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:மரபணு மாற்ற உணவுப் பயிர்களை இந்தியாவில் அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மக்களின் கருத்தறியும் கூட்டங்களை மத்திய அரசு இந்தியாவில் 7 இடங்களில் நடத்துகிறது.ஆனால் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மக்களிடம் கருத்துகளைக் கேட்காமல், மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிப்பதற்கு ஆதரவாகப் பேசுகிறார். ஒரு கருத்துத் திணிப்பை தமிழக அரசு நடத்துகிறது.மரபணு மாற்ற விதைகள் விரைவாகப் பயன்பாட்டுக்கு வர வேண்டும்' என்று மான்சாண்டோ நிறுவனத்தின் ஏஜெண்ட் போல தமிழக அரசும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்வருகின்றன.மரபணு மாற்ற உணவுப் பயிர்கள் குறித்து மத்திய அரசு தமிழகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவில்லை. இந்நிலையில் தமிழகத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வற்புறுத்தாதது ஏன்?மரபணு மாற்ற பயிர்கள் கூடாது என்ற ஆராய்ச்சியாளர்களின் நிலைப்பாட்டை, தமிழக விவசாயிகளைப் பாதுகாக்கும் கருத்துகளைப் பதிவு செய்யக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி கருதுவதுதான் இதற்கு காரணம். இது குறித்து கருணாநிதி எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை.இந்தியாவில் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர் கத்தரிக்காய். இதை உண்பதால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதை முழுமையாக ஆராயாமல், குறுகிய கால ஆய்வுகளின் அடிப்படையில் மரபணு மாற்ற கத்தரிக்காயை அனுமதிப்பது தவறானது.மரபணு மாற்ற பருத்தி விதைகளைப் பயன்படுத்தியதால் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆடு, மாடுகள் செத்துப் போயின. இது பருத்திப் பயிர்த் தொழிலுக்கே பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மரபணு மாற்ற கத்தரிக்காயை விளைவித்தால், அது குணப்படுத்த இயலாத உடல் நலக் கேடுகளை ஏற்படுத்தும் என்பதை இத்துறையின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் வைகோ.
குறிச்சொற்கள்: செய்திகள், பி.டி.கத்தரிக்காய்: மக்களின் உணர்வுப்படி முடிவெடுக்க வைகோ வலியுறுத்தல்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது