இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பால் விலை உயர்வை முடிவு செய்யவேண்டியது மாநிலங்களே: சரத் பவார்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பால் விலை உயர்வு குறித்து மாநிலங்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.பால் உற்பத்தியை அதிகரிக்க மாநிலங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பால் தட்டுப்பாடு வெகுவாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.தில்லியில் புதன்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:வட இந்தியாவில் பால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பால் கொள்முதல் தேவைக்கேற்ப பால் விலையை மாநிலங்கள் உயர்த்திக் கொள்ள வேண்டும். விலை உயர்வு குறித்து மாநிலங்கள்தான் முடிவு செய்யவேண்டும். மத்திய அரசு இதில் முடிவு ஏதும் எடுக்கமுடியாது. கடந்த அக்டோபரில் சில மாநிலங்கள் பால் விலையை உயர்த்தின. அதனால் அங்கு பால் தட்டுப்பாடு ஓரளவு நீங்கியது. தற்போது பால் தட்டுப்பாடு மீண்டும் தலைதூக்கியுள்ளதால் அதற்கேற்ப விலை உயர்வை மாநிலங்களே நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.பால் பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பால் கொள்முதல் செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக விலை உயர்வை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு மாநிலங்கள் தள்ளப்பட்டுள்ளன.பால்வளத் துறை மேம்பாட்டுக்காக மத்திய அரசிடம் உள்ள நிதியை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநிலங்கள் அவற்றை பெறாததால் அதற்கான நிதி மத்திய அரசிடம் வெறுமனே உள்ளது. பால்வளத் துறை மேம்பாட்டுக்காக நடப்பு ஐந்தாண்டு திட்டத்துக்கு ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், மேகாலயம், சிக்கிம், மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், உத்தரகண்ட், கோவா, அசாம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் இந்த நிதியை இதுவரை பயன்படுத்தவில்லை.2020-ம் ஆண்டில் இந்தியாவின் பால் தேவை 166 மில்லியன் டன். ஆனால் தற்போதைய உற்பத்தி 108.5 மில்லியன் டன்னாக உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மாநிலங்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மாநிலங்கள் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கேற்ப மத்திய திட்டங்களை அவைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது தேவைக்கான பால் உற்பத்தியை உள்நாட்டிலேயே மேற்கொள்ள தவறினால் பால் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என்றார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment