இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கள் இறக்க தங்கபாலு ஆதரவு

மாற்றுத் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் வரை கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்தார்.

÷தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் அவர் பேசியது:

÷நலிவடைந்த, துன்பத்தில் இருக்கின்ற மக்களுக்காக உழைப்பதுதான் எங்களைப் போன்ற காங்கிரஸôரின் கடமை. அதனால்தான் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோரிக்கைக்காக நீங்கள் போராடி வருவதை நான் அறிவேன். அதில் எனக்கு கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான். ஆனாலும் வேறு தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் இருக்கும் தொழிலை செய்ய அனுமதிக்க வேண்டும்.

÷சமூகம் முன்னேறும் வரை, மாற்றுத் தொழில்கள் உருவாகும் வரை குலத் தொழில் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

÷வெளிநாட்டு மதுபானங்கள் விற்க அனுமதிக்கப்படும் நிலையில் உள்நாட்டு பானங்களுக்கு தடை விதிப்பது ஜனநாயக நாட்டில் சரியல்ல. எனவே தமிழ்நாடு நாடார் பேரவையின் கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன். இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் எடுத்துச் சொல்வேன்.

÷முடங்கிக் கிடக்கும் 1,500 பனை வெல்லக் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த வேண்டும், நாடார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், குளச்சலில் துறைமுகம் அமைக்க வேண்டும், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நானும் ஆதரிக்கிறேன். குளச்சல் துறைமுகம் விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய அரசின் சார்பில் நான் உறுதியளிக்கிறேன். அதுபோல தடைகளைத் தாண்டி சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோரின் முயற்சியில் சேது சமுத்திரத் திட்டமும் நிறைவேற்றப்படும் என்றார் தங்கபாலு.

விழாவில் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, கதர் வாரியத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், தமிழ்நாடு நாடார் பேரவையின் தலைவர் என்.ஆர். தனபாலன், பொதுச்செயலாளர் ஜி. கரிக்கோல்ராஜ், துணைத் தலைவர் சதாசிவம், பொருளாளர் செல்லப்பன், தொழிலதிபர் பால்பாண்டியன், கவிஞர் காசிமுத்துமாணிக்கம், தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

÷கோரிக்கைகள்: கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும், முடங்கிக் கிடக்கும் 1,500 பனை வெல்லக் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த வேண்டும், நாடார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், குளச்சலில் துறைமுகம் அமைக்க வேண்டும், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் ஆகிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment