இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாயப் பணிகளுக்கு சிறப்புச் சலுகைகள் அவசியம்: மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான்


நாகப்பட்டினம், ஜன. 23: விவசாயம் லாபகரமான தொழிலாக மாற்றப்பட, விவசாய பணிகளுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்க வேண்டியது அவசியம் என்றார் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் செüகான். நாகப்பட்டினம் அருகே உள்ள கீச்சாங் குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, சுனாமி நிரந்தர வீடுகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழாவில், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் செüகான் பேசியது: சுனாமி சீற்றத்தால் சொந்தங்களையும், சொத்துகளையும் இழந்து தவித்த தமிழக மக்களின் துயரத்தில் பங்கேற்று, உதவிகள் செய்ய மத்திய பிரதேச அரசுக்கு அளித்த வாய்ப்புக்கு நன்றி. மக்கள் நலனுக்கான மத்தியப் பிரதேச அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. பெண் குழந்தைகள் பிறப்பதை விரும்பாத நிலையை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தைகளுக்காக சிறப்புத் திட்டம் (லாட்லி லட்சுமி யோஜனா) செயல்படுத்தப்படுகிறது. பெண்ணின் திருமணத்தின்போது ரூ. 1.18 லட்சம் ரொக்கம் வழங்கப்படுகிறது. இதை தாய்மாமன் சீர்வரிசையாக மத்தியப் பிரதேச அரசு வழங்குகிறது. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். இதைக் கருத்தில் கொண்டே மத்திய பிரதேசத்தில் அனைத்து விவசாயக் கடன்களுக்கும் 3 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதைத் தவிர, நெல், கோதுமை போன்ற விளை பயிர்களுக்கு ஆதார விலையுடன் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது என்றார் சிவராஜ்சிங் செüகான். முன்னதாக, மத்திய பிரதேச மாநில அரசின் நிதி உதவியுடன், சேவா பாரதி அமைப்பு மூலம் நாகை கீச்சாங்குப்பத்தில் ரூ. 9.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 340 சுனாமி நிரந்தர வீடுகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தார் சிவராஜ்சிங் செüகான். மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம்,மத்திய பிரதேச மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெயந்த் மலையா, தமிழக பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment