விவசாயிகளை "மலைக்க' வைக்கும் பவர் டில்லர் விலை
7:37 AM செய்திகள், விவசாயிகளை "மலைக்க' வைக்கும் பவர் டில்லர் விலை 0 கருத்துரைகள் Admin
விவசாயிகளை "மலைக்க' வைக்கும் பவர் டில்லர் விலை
Last Updated :
விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் பவர் டில்லர்கள் பன்மடங்கு லாபம் வைத்துச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் இதன் விலையை பெருமளவு குறைக்க வாய்ப்பிருப்பதாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். விவசாயம் மற்றும் அதுசார்ந்த பல்வேறு தொழில்களுக்கும் மாடுகள் பெரும் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது மாடுகள் விலை உயர்வு மற்றும் அவற்றை பராமரிப்பதில் உள்ள சிரமம் காரணமாக, மாடுகள் விவசாயப் பணிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வருகின்றன.விவசாயம் இயந்திர மயமாக்கலின் விளைவாக, மாடுகளைக் கொண்டு செய்யப்பட்ட பணிகள் அனைத்தும் தற்போது, பவர் டில்லர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் தற்போது 1,000 பவல் டில்லர்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆண்டுக்கு 500 பவர் டில்லர்கள் புதிதாகத் தேவைப்படும் என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இந்தியத் தயாரிப்பு பவர்டில்லர்கள் 80 சதவிகிதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பவர் டில்லர்கள் 20 சதவிகிதமும் பயன்படுத்தப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். ÷சீனாவின் தயாரிப்புகள் பல இந்தியப் பெயர்களிலேயே விநியோகிக்கப்படுகின்றன. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு ஆயிரம் பவர் டில்லரும் ஒவ்வொரு பெயரில் விநியோகிக்கப் படுகின்றன. ÷2003-04 வரை பவர் டில்லர்கள் விலை ரூ. 45 ஆயிரம் வரைதான் இருந்தது. 2004-க்குப் பிறகுதான் மானிய விலையில் விவசாயிகளுக்கு பவர் டில்லர் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கடலூர் மாவட்டத்துக்கு, ஆண்டுக்கு 100 பவர் டில்லர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. ÷உள்நாட்டு பவர்டில்லர்கள் விலை ரூ. 1.39 லட்சம் வரையிலும், சீனா தயாரிப்பு பவர் டில்லர்கள் ரூ. 1.28 லட்சம் வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. விவசாயிகளுக்கு ரூ. 45 ஆயிரம் மானியம் போக, உள்நாட்டு பவர் டில்லர்களும் வெளிநாட்டுப் பவர் டில்லர்களும் ரூ. 88 ஆயிரத்துக்கு வழங்கப்படுகிறது. ÷இதுகுறித்து டிராக்டர் டீலரும் விவசாயிமான கு.ராமலிங்கம் கூறுகையில், ""பவர் டில்லர்களுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. விற்பனை வரி 4 சதவிகிதம்தான். சீனாவில் இருந்து வரும் பவர் டில்லர்களின் அடக்கவிலை ரூ. 60 ஆயிரம்தான். ஆனால் இங்கு விற்பனை விலை மட்டும் ரூ. 1.28 லட்சம் என நிர்ணயிக்கப்படுகிறது. உள்நாட்டுத் தயாரிப்புகளும் அடக்க விலை ரூ. 80 ஆயிரத்துக்குள்தான். உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு ரூ. 1.38 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது'' என்றார். இதுகுறித்து விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் கூறுகையில், ""பவர்டில்லர் தேவை அதிகரித்து வருகிறது. மானிய விலையில் வாங்குவதற்குத்தான் விவசாயிகள் காத்து இருக்கிறார்கள். கடலூர் மாவட்டத்துக்கு இந்த ஆண்டுக்கு 500 பவர் டில்லர்கள் தேவைப்படுகிறது. ஆனால் 100-தான் வழங்கப்பட்டு இருக்கிறது. ÷2004-ம் ஆண்டுவரை பவர் டில்லரின் விலை குறைவாகத்தான் இருந்தது. 2004-க்குப் பிறகுதான் மானியம் அதிகரித்தது. அத்துடன் விலையையும் உயர்த்தி விட்டனர். நியாயமாகப் பார்த்தால் விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ. 45 ஆயிரத்தில் பவர் டில்லர் வழங்க முடியும். சீனா பவர்டில்லர்கள் 3 ஆண்டுகள் தான் உழைக்கின்றன. ஆனால் இந்தியத் தயாரிப்புகள் 15 ஆண்டுகளுக்கு மேல் உழைக்கின்றன. இரண்டையும் ஒரே விலையாக நிர்ணயிப்பதும் ஏன் என்று தெரிவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
குறிச்சொற்கள்: செய்திகள், விவசாயிகளை "மலைக்க' வைக்கும் பவர் டில்லர் விலை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது