இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

போலி நாற்றுக்கள்; அதிகாரி எச்சரிக்கை

போலி நாற்றுக்களை வாங்கி விவசாயிகள் ஏமாற வேண்டாம் என விதை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. உடுமலை விதை ஆய்வாளர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கை: உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் தென்னை மற்றும் காய்கறி நாற்றுப்பண்ணைகள் உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையான நாற்றுக்களை நாற்றுப் பண்ணைகளிலிருந்து வாங்கி, சாகுபடி செய்கின்றனர்.இந்த நாற்றுக்களை வாங்கும் போது, கோவை விதை ஆய்வு இயக்குனர் உரிமம் பெற்றுள்ளனரா என்பதை அறிந்து வாங்கவும். விற்பனை பட்டியலில் வாங்குபவர் மற்றும் விற்பவர் கையெழுத்துடன் கேட்டு வாங்கவும். தக்காளி போன்ற வீரிய காய்கறிகள் வாங்கும்போது, ஒட்டுக்கட்டி விளைவிக்கப்பட்ட செடியின் பழங்களிலிருந்துதான் விதைகள் எடுத்து, நாற்றுக்கள் தயார் செய்திருக்க வேண்டும். பண்ணைகளில் விளைவிக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை பழங்களிலிருந்து விதை எடுத்து, நாற்றுக்கள் தயார் செய்கிறார்கள். இவ்வாறு தயாராகும் போலியான நாற்றுக்கள் குறைந்த விலைக்கு, அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகள் உரிமம் பெற்ற நாற்றுப்பண்ணைகளில் இருந்து, தரமான நாற்றுக்களை வாங்கி பயனடையவும். விதை விற்பனை உரிமம் பெறாமல் நாற்றங்கால் அமைத்து விற்பனை செய்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment