ஏலக்காய் விலை திடீர் சரிவு:கிலோவிற்கு ரூ.600 குறைந்தது
12:34 AM ஏலக்காய் விலை திடீர் சரிவு:கிலோவிற்கு ரூ.600 குறைந்தது, செய்திகள் 0 கருத்துரைகள் Admin
கவுதிமாலா நாட்டில் ஏலக்காய் சாகுபடி முற்றிலும் இல்லாததால் தான் இந்த விலை உயர்வு என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற ஆக்ஷன்களில் ஏலக்காய் விலை திடீரென சரியத் துவங்கியுள்ளது. கிலோவிற்கு ரூ. 600 வரை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களில் அதிகபட்ச சராசரி விலையாக கிலோவிற்கு ஆயிரத்து 500 வரை கிடைத்தது. ஆனால் அடுத்து வந்த வாரங்களில் நடைபெற்ற ஆக்ஷன்களில் சராசரி விலை கிலோவிற்கு 915 ரூபாய் தான் கிடைத்தது. இந்த திடீர் விலை குறைவு ஏல விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.
ஏலக்காய் வர்த்தகர்கள் கூறுகையில், டில்லியில் கடும் பனி நிலவுகிறது. வர்த்தகர்கள் பகல் 2 மணிக்கு வந்து கடையை திறந்து மீண்டும் 3 மணிக்கெல்லாம் அடைத்து விடுகின்றனர். எனவே டில்லியில் ஏலக்காய் வர்த்தகம் முழுவதும் நிறுத்தப்பட்டது என்றே கூறலாம். மேலும் ஏலக்காய் அதிகம் பயன்படுத்தும் வடமாநிலங்களில் இந்த மாதம் திருமணம் போன்ற விசேஷங்கள் அதிகம் இருக்காது. எனவே ஏலக்காய் பயன்பாடும் வடமாநிலங்களில் குறைந்துள்ளது. இது தான் விலை குறைவிற்கான காரணங்களாகும். இந்தியாவிற்கு நல்ல ஏற்றுமதி ஆர்டர்கள் வந்துள்ளது. எனவே குடியரசு தினத்திற்கு பின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.
குறிச்சொற்கள்: ஏலக்காய் விலை திடீர் சரிவு:கிலோவிற்கு ரூ.600 குறைந்தது, செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது