இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

100 நாள் வேலைக்கு 'லீவு' விட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

சம்பா நெல் அறுவடைப் பணி தொடங்க உள்ளதால் 100 நாள் வேலை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.திருச்சி கலெக்டர் அலுவலகத் தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சவுண்டையா தலைமை வகித் தார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:அய்யாக்கண்ணு (பாரதீய கிசான் சங்க மாநில பொதுச் செயலாளர்): குஜராத்தில் கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரமும், உத்தரபிரதேசத்தில் ரூ.2 ஆயிரத்து 200ம், மகாராஷ்டிராவில் ரூ.2 ஆயிரத்து 100ம் வழங்கப்படுகிறது. மே லும், ஆலை நிர்வாக மே கரும் பை வெட்டி எடுத்துச் செல்கி றது. ஆனால், திருச்சி கோத் தாரி சர்க்கரை ஆலை கரும்பு டன்னுக்கு ரூ.1,740 மட்டு மே வழங்குகிறது. எனவே, கரும்பிற்கு கூடு தல் தொகை வழங்க வேண்டும்.


கோத்தாரி சர்க்கரை ஆலை அதிகாரி: கோத்தாரி சர்க்கரை ஆலை 10 ஆண்டுகளாக விவசாயிகளுடன் கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே கரும்புக்கு விலை நிர்ணயிக்கிறது. அதேபோல இந்த ஆண்டும் கூட்டம் நடத்தப்பட்டு கரும்பிற்கு விலை நிர்ணயிக்கப்படும். டன்னுக்கு ரூ.1,740 என் பது தமிழக அளவில் வழங்கப்படும் அதிகபட்ச தொகை.


கலெக்டர் சவுண்டையா: கரும்பு விலை தொடர்பாக இம் மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ விவசாயிகள் கூட்டம் நடத்தப்படும்.


புலியூர் நாகராஜன் (காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு தலைவர்): 100 நாள் வேலை திட்டத்தில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார் கள் வருகின்றன. இதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண் டும். மேலும், சம்பா அறுவடை பணி தொடங்க உள்ளதால் 100 நாள் வேலை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண் டும். அதிக மகசூல் தரக்கூடிய கோ.43 மற்றும் திருச்சி-1 போன்ற நெல் ரக விதைகளை பரவலாக விநியோகம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் ஏரிக் கரைகளில் மரங்கள் இல்லாததால் கரைகள் பலவீனமாக உள்ளன. எனவே, கரைகளை பலப்படுத்த பனை மரக்கன்றுகளை வளர்க்க வேண் டும். மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் உணவு பொருளுக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அதை தடை செய்ய வேண்டும்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment