இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பிரிமியம் கட்டிய விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு திட்டத்தில் நஷ்டஈடு வழங்கவில்லை : விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார்

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் பிரிமியம் கட்டிய பயிர்கள் நஷ்டமானதற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. வேளாண்மை இணை இயக்குநர் லூயிஸ் ராஜரத்தினம், பொதுப்பணித்துறை தாமிரபரணி கோட்ட செயற்பொறியாளர் நாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனசிங் டேவிட், வேளாண்மை அதிகாரி பாலசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே அவர்கள் கொடுத்த கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரம் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதியில் கடந்த 2008-2009ம் ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தில் பிரிமிய தொகை செலுத்திய விவசாயிகளுக்கு உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்கள் கருகி விட்ட நிலையிலும் பயிர் பாதுகாப்பு நஷ்ட ஈட்டுத் தொகை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.



இதனால் விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு கொடுக்க வேண்டும். இதற்கு கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த கலெக்டர் பிரகாஷ், இது சம்பந்தமாக கடந்த 12ம் தேதிமற்றும் சில தினங்களுக்கு முன்பு இது குறித்து அரசுக்கு உரிய கருத்து அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி வந்தவுடன் நஷ்டஈடு தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், எட்டயபுரம் பகுதியில் போதிய மழை இல்லை. குளங்கள் நிரம்பவில்லை. இதனால் இம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.



வறட்சி மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை அறிவிக்க கூடிய அளவிற்கு இங்கு நிலைமை இல்லை. மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையான 662 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். நம் மாவட்டத்தில் 621 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மழை பெய்துள்ளதை வைத்து தான் வறட்சி மாவட்டம் குறித்து அறிவிப்பு செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய மழை பெய்துள்ளதால் இம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பு இல்லை. அரசு அறிவிக்கவும் செய்யாது. மாவட்ட நிர்வாகமும் அதற்கு பரிந்துரை கடிதம் அனுப்ப முடியாது என்று கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார்.குளங்கள், பாசன கால்வாய்களை தூர் வாரவேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் போன்றவை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.



கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நிர்மலன், உதவி பொறியாளர் ரகுநாதன், மத்திய கூட்டுறவு பாங்க் தனி அதிகாரி செந்தமிழ்செல்வி, விவசாய சங்க நிர்வாகிகள் நயினார்குலசேகரன், கணபதிராமன், வேலுமயில் தமிழ்மணி மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment