மூலிகைப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலை: அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்
7:16 AM
செய்திகள்,
மூலிகைப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலை:
Admin
Last Updated :
நெல்,கரும்புக்கு வழங்கப்படுவதைப் போல் மூலிகைப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மருத்துவப் பயிர்கள் சாகுபடி குறித்த மாநில கருத்தரங்கம், கொள்முதல் விற்பனையாளர்கள் கூட்டமர்வு மற்றும் கண்காட்சி தொடக்க விழாவில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசியது:மூலிகைப் பயிர்கள் சாகுபடியில் இப்போது நல்ல லாபம் கிடைத்து வருகிறது. இந்தியாவில் மருத்துவத்திற்கு மூலிகையின் தேவை ஆண்டுக்கு 1.77 லட்சம் டன்னாக உள்ளது. வெளிநாடுகளுக்கு 56 ஆயிரத்து 500 டன் மூலிகை ஏற்றுமதியாகிறது. மொத்தம் 3.20 லட்சம் டன் மூலிகை ஆண்டுதோறும் நமக்குத் தேவைப்படுகிறது.நமது நாட்டில் சித்தா, ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகளில் ஆண்டுக்கு ரூ.8,800 கோடி மதிப்பிலான வணிகம் நடைபெறுகிறது. உலக அளவில் மூலிகை மருத்துவத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இப்போது சென்னா, குளோரியோசா, கோலியஸ், நித்திய கல்யாணி மற்றும் இதர மருத்துவப் பயிர்கள் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு நிர்ணயம் செய்யப்படுவது போல், மருத்துவப் பயிர்களுக்கும் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையை குறைந்தபட்ச கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்ய திட்டமிட்டுள்ளது.அந்த விலைக்கு மேல் வெளிச்சந்தையில் விற்கவும், அந்த விலைக்கு குறைவாக வெளிச்சந்தையில் விலை நிர்ணயிக்கப்பட்டால் அவற்றை அரசே கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
குறிச்சொற்கள்:
செய்திகள்,
மூலிகைப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலை:
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது
இதனைச் சார்ந்த பதிவுகள்
0
கருத்துரைகள்
-இந்த பதிவிற்கு..
Post a Comment