இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கரும்பு விவசாயிகள் வாழ்வு இனிக்குமா?




அரசின் பொங்கல் பரிசுத் திட்டத்துக்கு வெல்லம் கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில்தான் சேலம் மாவட்ட கரும்பு விவசாயிகள்,​ வெல்லம் தயாரிப்பாளர்களின் பொங்கல் கொண்டாட்டங்கள் அடங்கியுள்ளன.சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் காமலாபுரம்,​ சர்க்கரை செட்டிப்பட்டி,​ கருப்பூர்,​ தும்பிபாடி,​ வெள்ளாளப்பட்டி,​ தேக்கம்பட்டி மற்றும் மூங்கில்பாடி அதன் சுற்றுப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. இங்கு ரோஸ் கரும்பு,​ போண்டா கரும்பு,​ பச்சை கரும்பு,​ ரஸ்தாளி கரும்பு,​ பனி கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான கரும்பு ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ​கடந்த ஆண்டு வரை மஞ்சள் பயிரிட்டு வந்த இப்பகுதியைச் சேர்ந்த ஒரு சில விவசாயிகளும் தமிழக அரசு பொங்கல் பரிசாக அரிசி,​ வெல்லத்தை கடந்த ஆண்டு வழங்கியதை அடுத்து,​ அதிக லாபம் பெறலாம் என்ற ஆசையில் இப்போது கரும்பு பயிரிட்டுள்ளனர்.இப்பகுதியில்தான் சேலம்,​ நாமக்கல்,​ தருமபுரி,​ கிருஷ்ணகிரி மாவட்டங்களிலேயே சுவையான தரமான வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள காமலாபுரத்தில் மட்டும் சுமார் 200 கரும்பாலைகள் உள்ளன. கரும்பு பயிரிடும் விவசாயிகளில் பலரும் சொந்தமாகவே ஆலைகள் வைத்து வெல்லம் தயாரித்து சேலம் லீபஜார் மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர்.அவர்களிடம் இருந்து வெல்லத்தை ஒரு சிப்பம் ​(31 கிலோ)​ ஆயிரம் ரூபாய்க்கு ​ வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்குவதையடுத்து இதன் விலை இப்போது ரூ.1,135 ஆக உயர்ந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 300 டன் வரை இங்கு வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கரும்பு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அதிக அளவில் இப்போது வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு தமிழக அரசு பொங்கல் பரிசு பொருள்கள் வழங்குவது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.அறிவிப்பு வரும்,​ அதனால் உற்பத்தி பொருளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று நம்பியிருந்த கரும்பி விவசாயிகள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையின்போது விலை இன்னும் சற்று கூடும் என்றபோதிலும்,​ அரசே எங்களிடம் இருந்து ஒட்டு மொத்தமாக பண்டிகைக்காக கொள்முதல் செய்தால் அதிக விலை கிடைக்கும். விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் உற்பத்திச் செலவுகளும் அதிகரித்துள்ளன. ÷எனவே இந்த ஆண்டும் பொங்கலுக்கு ரேஷன் கடைகள் மூலம் வெல்லம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் உற்பத்தியான வெல்லம் பாதிக்கப்படுவதுடன் போதுமான விலை இல்லாமலும் விவசாயிகளும் நஷ்டப்பட நேரிடும் என்கிறார் காமலாபுரம் கரும்பு விவசாயி சி.பழனிக்கவுண்டர்.÷கரும்பு,​ வெல்லம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த பொங்கல் பண்டிகை இனிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment