மரபணு மாற்றப்பட்ட விதைகளின் விற்பனையைத் தடுக்க முடியாது: தமிழக அரசு
5:25 PM செய்திகள், மரபணு மாற்றப்பட்ட விதைகளின் விற்பனையைத் தடுக்க முடியாது: தமிழக அரசு 0 கருத்துரைகள் Admin
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் விற்பனையைத் தடுக்க முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
÷சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்), நன்மாறன் (மார்க்சிஸ்ட்), செங்கோட்டையன் (அதிமுக), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) ஆகியோர் எழுப்பிய துணைக் கேள்விகளுக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அளித்த பதில்:
""மரபணு மாற்றப்பட்ட கத்தரி விதைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வில்லை. அமெரிக்காவின் மான்சாட்டோ நிறுவனம் வீரிய ரக மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்துள்ளது. இந்த நிறுவனத்திடம் ஒருமுறை விதைகளை வாங்கினால், தொடர்ந்து வாங்க வேண்டும்.
÷மான்சாட்டோ நிறுவனத்திடம் இருந்து காப்புரிமை பெற்ற நிறுவனம், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அறிமுகப்படுத்த கடந்த 1996}ம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தது.
விதைகளை வாங்கி சோதனை அடிப்படையில் பயிர் செய்து பாதிப்பு வருகிறதா? என முதல்வர் பார்க்கச் சொன்னார். பல பயிர்களுக்கு இடையே இந்த விதைகளை விதைத்த போது, எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கண்டறியப்பட்டது. ஆனாலும், அதை அரசு அனுமதிக்கவில்லை. பயிர்கள் பாதித்தது என்றால், வழக்குப் போடலாம். அதற்காக, விதைகள் விற்பனையைத் தடுக்க முடியாது.
மத்திய அரசு அங்கீகாரம்... மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்வதற்கான அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்குகிறது. மாநில அரசின் சார்பில் அனுமதியோ, அங்கீகாரமோ கொடுக்கவில்லை.
÷மரபணு மாற்றப்பட்ட விதைகளால் மற்ற பயிர்கள் பாதிக்கப்படுவதாக அரசுக்கு இதுவரை புகார்கள் வரவில்லை. மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகள் வாங்குவதற்கு அரசு ஆதரவும் அளிக்கவில்லை. "விளைச்சல், உற்பத்தி அதிகமாக உள்ளது' என அவர்களே வாங்குகிறார்கள்.
மாநில அரசின் கண்டுபிடிப்பு... கத்தரியின் பல்வேறு விதைகளை கலப்பினம் செய்து மரபணு மாற்றப்பட்ட விதையை தமிழக வேளாண்மைத் துறை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
÷இந்த விதை மூலம் உற்பத்தியாகும் கத்தரியில் புழு தாக்காது; சொத்தை ஏற்படாது. மூன்று ஆண்டுகள் உழைப்பில் இந்த விதையை உருவாக்கியுள்ளனர். இதை உடனடியாக விவசாயிகளுக்கு அளித்து விட முடியாது.
÷மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு இந்த விதைகள் அனுப்பப்பட்டன. அந்தக் குழு விதையைச் சோதனை செய்து இதனால் மற்ற பயிர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என சான்று அளித்துள்ளது.
மத்திய அரசின் அனுமதிக்காக மரபணு மாற்றப்பட்ட கத்தரி விதையை அந்தக் குழு அனுப்பியுள்ளது'' என்றார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.

குறிச்சொற்கள்: செய்திகள், மரபணு மாற்றப்பட்ட விதைகளின் விற்பனையைத் தடுக்க முடியாது: தமிழக அரசு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது