இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பிடி கத்தரி: வெற்று கோஷங்களோடு முடிந்த பொது விவாத கூட்டம்

ஹைதராபாத்தில் பிடி கத்தரி குறித்து விவாதம் நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் வெற்று கோஷங்களுடன் முடிந்ததால் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடும் அதிருப்தி அடைந்தார்.

சர்ச்சைக்குரிய பிடி கத்தரிக்காய் விதைகளை இந்திய விவசாயத் துறையில் அனுமதிப்பது குறித்து மத்திய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விவகாரம் குறி்த்து பொது விவாதம் நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.

இதற்காக ஹைதராபாத்தில் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் பொது விவாதத்துக்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்தில் பங்கேறக அமைச்சர் அரங்கினுள் நுழைந்த உடனே, மரபணு மாற்றப்பட்ட கத்தரி விதைகளை உடனடியாக சந்தையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மற்றொரு தரப்பினர் மரபணு கத்தரியை அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து இரு தரப்பினரும் கோஷங்கள் எழுப்பியதால் யாரும் விவாதம் செய்வதற்கான சூழல் அமையவில்லை. அதிருப்தி அடைந்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூட்டத்தினரை அமைதிப்படுத்த முயன்றார்.

ஆனால் தொடர்ந்து பிடி கத்தரிக்கு எதிராகவும், ஆதரவாக கோஷங்கள் மட்டுமே எழுப்பப்பட்டதால் ஆக்கப்பூர்வமான விவாதமோ கருத்துப் பரிமாற்றமோ நடைபெறாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment