இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நெற்பயிருக்கு ஹெலிகாப்டரில் மருந்து விவசாயிகள் கூட்டத்தில் விவாதம்



ராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்பயிரில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு ஹெலிகாப்டரில் மருந்து தெளிப்பது தொடர்பாக ராமநாதபுரத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தர். விவசாயிகள் பலரும் பங்கேற்றனர்.



அதிகாரிகள் விவசாயிகள் இடையே நடந்த விவாதம்:பாலசுந்தரமூர்த்தி: கண்மாய் பராமரிப்பு பணிகள் செய்ய வழங்கப்படும் நிதியை பாசன சங்கங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வழங்க வேண்டும்.
குருதிவேல்மாறன்(உதவிப்பொறியாளர்): நீர்பாசன சங்கங்களுக்கு நிதி வழங்கும் முறையில் சில சிக்கல்கள் உள்ளன. அதை களைந்தால் மட்டுமே மற்றவை பற்றி பேச முடியும்.
பாலகிருஷ்ணன்: இரண்டு ஒன்றியங்களில் மட்டும் பாதிப்பு உள்ளதாக கருதி, மற்ற பகுதிகளை புறக்கணித்துவிட கூடாது. மாவட்டம் முழுவதும் பயிர் சேதம் இருப்பதாக தகவல் வருவதால், ஆய்வு செய்ய வேண்டும்.
சுந்தரராஜன்: பூச்சியால் ஏற்படும் பாதிப்பையும் காப்பீட்டில் சேர்க்க வேண்டும். ஹெலிகாப்டர் மூலம் மருந்து தெளித்து பூச்சி தாக்குதலை தடுக்கலாமா?
சத்தியமூர்த்தி(வேளாண் இணை இயக்குனர்): ஹெலிகாப்டரில் மருந்துதெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்நோய்க்கு அறிவிக்கப்பட்ட மருந்துகளை கை தெளிப்பான் மூலம் அடித்தாலே போதும், விதை தெளிப் பாதை பயன்படுத்துவதும் தவறாகும். ஏக்கருக்கு 200 லிட்டர் நீர் கொண்டு தெளித்தால் போதுமானதாகும்.
கலெக்டர்: பாதிக்கப் பட்ட இரண்டு ஒன்றியங்களை மட்டுமின்றி, மாவட்டங்களிலும் கட்டாயம் ஆய்வு மேற் கொள்ளப்படும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும், என்றார்.
கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் பாபு, வேளாண் துணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலர் அப்துல்ஹமீதுகான், உதவி கலெக்டர்(பயிற்சி) மோகனசந்திரன் உட்பட பலரும் பங்கேற்றனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment