திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் பிப்.2ம் தேதி முதல் பிப்.15ம் தேதி வரை கோழிகளுக்கு தடுப்பூசி முகாம்
1:52 AM கோழிகளுக்கு தடுப்பூசி முகாம், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் பிப்.2ம் தேதி முதல் பிப்.15ம் தேதி வரை கோழிகளுக்கான தடுப்பூசிப்பணி முகாம் நடக்க இருக்கிறது.
இது குறித்து கலெக்டர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தி.மலை மாவட்டத்தில் கோழிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பிப்ரவரி மாதங்களில் 2 வார முகாம் நடத்தப்படுகிறது. இதில், நகரம், கிராமம் மற்றும் சிறியகிராமங்களில் உள்ள அனைத்து இடங்களிலுள்ள கோழிகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு, ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோழிகளுக்கு இப்பணியை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பணி வரும் பிப்.2ம் தேதி முதல்15ம் தேதி முடிய மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. கோழிகள் வளர்க்கும் விவசாயிகள் அருகிலுள்ள கால்நடை மருத்தகம், கால்நடை கிளை நிலையங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் முகாம்களில் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்அடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்: கோழிகளுக்கு தடுப்பூசி முகாம், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது